“பாட்டி மெத்தேடை ஃபாலோ செய்தா..!” – படு ஜோரா கொத்தமல்லி வளரும்..!

கொத்தமல்லி : உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை ஒரு சிறிய இடம் இருந்தால் கூட இன்று அந்த இடத்தில் நீங்கள் தோட்டம் அமைத்து காய்கறிகளை பயிரிட முடியும். மேலும் இன்று வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் என்று பல வகைகளாக செடிகளை பயிரிட்டு வளர்ப்பதற்கான யுக்திகளை கையாண்டு வருகிறோம்.

coriander

அந்த வகையில் நீங்கள் கீரைகள் மற்றும் இதர செடிகளை உங்கள் வீட்டில் தோட்டத்தில் பயிர் செய்து அறுவடை செய்து அதை சமைத்தும் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் கொத்தமல்லி தழையை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது மாடி தோட்டத்தில் எப்படி பயிர் செய்யலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கொத்தமல்லி பயிர் செய்யும் விதம்

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது மாடி தோட்டத்தில் நீங்கள் கொத்தமல்லி பயிர் செய்ய விரும்பினால் பாட்டி பயன்படுத்திய மெத்தேடை பயன்படுத்தி நீங்கள் கொத்தமல்லி விதைகளை தூவி விடுவதின் மூலம் மிக விரைவில் இதிலிருந்து துளித்து செடிகள் வரும்.

அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் வர முழு கொத்தமல்லியை எடுத்து அதை நிலத்தில் வைத்து நீங்கள் போடும் செருப்பால் நன்கு தேய்த்து விடுங்கள்.

coriander

அதன் மூலம் முழு கொத்தமல்லி இரண்டாக உடைந்து விடும். இப்படி  உடைந்த பிறகு நீங்கள் அதை எந்த இடத்தில் பயிர் செய்ய விரும்புகிறீர்களோ அந்த மண்ணில் தூவி விட்டு மேலே கொஞ்சம் மண்ணை போட்டு நீரை தெளித்து விடுங்கள்.

ஒரு வார இடைவெளிக்கு பிறகு கட்டாயம் மிக அதிக அளவில் கொத்தமல்லி பயிர் துளித்து வந்திருக்கும்.எனவே ஒரு வாரம் தேவையான தண்ணீரை தினமும் காலை, மாலை கஷ்டம் பார்க்காமல் நீங்கள் தெளித்து வரவேண்டும்.

coriander

அப்படி செய்து வருவதன் மூலம் நீங்கள் போட்ட விதைகள் அனைத்துமே முளைத்திருக்கும். அதற்கு காரணம் நீங்கள் பாட்டி சொன்ன மெத்தேடை பயன்படுத்தி நன்கு செருப்பை கொண்டு நன்கு அழுத்தம் கொடுத்து தேய்த்து தூவிய விதைகள் தான்.

எனவே இனிமேல் கொத்தமல்லியை பயிரிட நினைப்பவர்கள் இதுபோல கொத்தமல்லியை நீங்கள் செருப்பால் தேய்த்து போடுவதின் மூலம் ஒரு விதை கூட பழுது இல்லாமல் முளைத்து கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …