அந்த கேள்வி எழுப்பிய நெட்டிசன்.. உச்ச கட்ட கோபத்தில் ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில்..!

கமலஹாசன் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே பிரபல பாடகியாக தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது .

நடிகை ஸ்ருதி ஹாசன்:

குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் திரைப்படத்தில் போற்றி பாடடி பெண்ணே பாடலை பாடிய இவர் திரைத்துறைக்கு அடி எடுத்த வைத்தார்.

அதை எடுத்து ஹேராம் என் மன வானில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் பாடல் பாடி வந்தார். மேலும் வாரணம் ஆயிரம்,உன்னை போல் ஒருவன், உதயன், ஏழாம் அறிவு, முப்பொழுதும் உன் கற்பனைகள், மான் கராத்தே,

புலி, வேதாளம், இது நம்ம ஆளு, எல் ஜி கே, கடாரம் கொண்டான் ,உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஸ்ருதிஹாசன் சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்.

ஹீரோயினாக அறிமுகம்:

இவர் முதல் முதலில் 2011 ஆம் ஆண்டு ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தமிழ் சினிமா ஹீரோயினாக அறிமுகமானார் .

இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிகை சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது . முதல் படத்தை தொடர்ந்து தனுஷ் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது .

குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ஃபேமஸாக இருந்து வருகிறது. தொடர்ந்து பூஜை, புலி வேதாளம் ,சிங்கம் புலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவிலும் நம்பர் 1 நடிகை:

தமிழை தாண்டி ஸ்ருதிஹாசன் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார் .

தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அவர் முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தென்னிந்திய சினிமாவில் பிடித்தார்.

தற்போது ஸ்ருதிஹாசன் மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதனிடையே சாந்தனு ஹசாரிகா என்பவருடன் காதலில் இருந்து வந்தார் நடிகை ஸ்ருதி ஹாசன் .

பின்னர் அவரை பிரேக் அப் செய்துவிட்டதாக சமீபத்திய பேட்டிகளில் கூறியிருந்தார் . இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நெட்டிசன் எழுப்பிய கேள்விக்கு கடும் கோபத்தோடு பதில் அளித்து இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் instagram-ல் அவர் ஆக்டிவாக அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

கடுங்கோபத்தில் ஸ்ருதி ஹாசன் பதில்:

சமீபத்தில் ‛Ask Me Anything’ என்ற பெயரில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து வந்த ஸ்ருதி ஹாசனிடம் தென்னிந்திய மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார் .

அதற்கு, இனவாதம் பார்வை என்பது சரி இல்லை” தென்னிந்திய மக்களை பார்த்து இட்லி, தோசை ,சாம்பார் என கூறுவது சரியில்லை.

நீங்கள் எங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. இது தொடரும் பட்சத்தில் “மூடிட்டு போடா” என்று தென்னிந்திய மொழியில் சொல்லுவேன் என ஸ்ருதிஹாசன் மிகவும் போல்டாக பதில் அளித்திருந்தார்.

இந்த தைரியமான பதில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தமிழ் பெண்ணுடா என் தமிழ் இனமடா என சுருதிஹாசனை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version