அட.. இத்தனை திரை பிரபலங்களா? – திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்..

நம் கைகளில் இருக்கும் ஐந்து விரல்கள் ஒரே மாதிரியாக இருக்கிறதா? ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருப்பது போல் திரை துறையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பல திரை பிரபலங்கள் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். அதுவும் இவர்கள் ஒரே இரத்தங்கள் என்றால் அது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அவனுக்கு என்ன குறை பார்க்க ஆள் அழகாக லட்சனமாக திரைப்படங்களில் நடிக்கக்கூடிய அத்தனை தகுதிகள் இருந்தும் அவனால் இன்னும் ஏனோ திரையில் ஜொலிக்க முடியவில்லை என்ற எணணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும். அப்படி வாய்ப்பு கிடைக்காத ஒரே ரத்தங்கள் யார்? யார்? என்பது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அட இத்தனை திரை பிரபலங்களா?

கனவு உலகமாக கருதப்படும் சினிமா உலகில் நட்சத்திரமாக ஜொலிக்க பலரும் தினம் தினம் ஒரு கனவோடு சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கோடம்பாக்கத்தில் தன் பெயர் உச்சரிக்கப்படாத என்று ஏங்க கூடிய நிலையில் திரை உலக நட்சத்திரங்களாக மின்ன வேண்டும் என்ற ஆசையில் திரையில் நுழைந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தத்தளிக்கும் ஒரே இரத்தங்கள் இன்றல்ல சினிமாத்துறை தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறார்கள்.

அப்படி உடன் பிறந்த அல்லது ஒரே ரத்த சம்பந்தம் உடையவர்கள் திரையுலகில் நுழைந்து சாதிக்க முயற்சி செய்திருந்தும் அதில் ஒருவர் மட்டும் நினைத்த அளவு திரை உலகை சாதிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட திரை பிரபலங்கள் யார்? யார்? என்பதை இனி நாம் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் ஏன் திரையுலகில் ஜொலிக்காமல் இருந்தார்கள் என்பதற்கான பதில் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் கட்டாயம் கமெண்ட்ஸ் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்..

இதில் முதலாவதாக நாம் தமிழில் முன்னணி ஹீரோவாக இருந்து தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கும் நடிகர் ஜீவாவை சொல்லலாம். இவர் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட போதும் இவருடைய அண்ணன் ஜித்தன் ரமேஷ் ஜித்தன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து தனது திறமையை முழுமையாக காட்டிய போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து இவரால் திரை உலகில் சாதிக்க முடியவில்லை.

தமிழ் திரைப்படங்களில் அற்புதமாக நடிப்பை காட்டி தன் அழகால் பலரையும் கவர்ந்த நடிகை பானுப்பிரியா ஒரு காலத்தில் இளைஞர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்த இவரின் தங்கை தான் சாந்திப்பிரியா அக்கா பெற்ற பெயரை இவரும் எடுத்து விடுவார் என்று நினைத்திருந்த சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் திரை உலகை விட்டு விலகிச் சென்றார். 

.

கரகாட்டக்காரன் படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய நடிகை கனகா ஒரு வாரிசு நடிகை என்பது உங்களுக்கு தெரியும். இவரது சகோதரி சாரதா ப்ரீத்தா திரையுலகில் நடிக்க வந்த போதும் சரியான முறையில் ஃபேமஸ் ஆகாமல் இருந்து விட்டார். இவர் சின்ன பசங்க நாங்க என்ற படத்தில் நடித்திருந்தார்.

இயக்குனர்களும் அவரது தம்பிகளும்..

திரை உலகில் தன்னை ஓர் மிகச் சிறந்த இயக்குனராக மாற்றிக்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கும் இயக்குனர் சிறுத்தை சிவா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது சகோதரர் தான் நடிகர் பாலா சிறுத்தை சிவா பெற்ற பெயரினை போல நடிகர் பாலாவால் மக்கள் மத்தியில் பெற முடியவில்லை. மேலும் அதிக அளவு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காததால் இவரது திரையுலகப் பிரவேசம் வீணாய் போனது.

சிறுத்தை சிவாவை அடுத்து இயக்குனர் ஏ எல் விஜய் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு நல்ல பெயரை பெற்றிருக்கக் கூடிய ஏ எல் விஜய்யின் தம்பி தான் நடிகர் உதய்.இவர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். எனினும் மக்கள் மத்தியில் சரியாக ரீச் ஆக முடியாமல் திரை வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இன்று வரை திரை உலகில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டார்.

கிராமத்து திரைப்படங்களுக்கு மிக நேர்த்தியான முறையில் கதை களத்தை அமைத்து அப்படியே கண்முன்னே காட்டுவதில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது இன்று வரை அந்த இடத்தை எவராலும் பெற முடியவில்லை இவரது மகன் மனோஜ் பாரதிராஜா தன் தந்தையைப் போல திரை உலகில் தனக்கு என்ற ஒரு பெயரை எடுக்க முடியாமல் போனது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version