சிம்புவுக்கு ஜோடியாக அசின்..! டைரக்டர் யாருன்னு தெரியுமா..? இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தனது தந்தை மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமிழ் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அவரது தந்தையான டி.ராஜேந்தர் பிரபலமான இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை வைத்திருப்பார்.

அந்த பாத்திரத்தில் சிம்புதான் நடிப்பார். இப்படி இருந்து வந்த நிலையில் சிம்பு வளர்ந்து இளைஞனான பிறகு தொடர்ந்து டி.ராஜேந்தர் அவரை வைத்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் சிம்புவை மக்கள் அடையாளம் காண்பதற்கு ஒரு முக்கியமான திரைப்படமாக காதல் அழிவதில்லை திரைப்படம் இருந்தது. அதனை தொடர்ந்து சிம்பு ஒரு வளர்ச்சி காணும் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வளர தொடங்கினார்.

சினிமாவில் வளர்ச்சி:

அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும்பான்மையான வரவேற்புகளும் இருந்து வந்தன. ஆனால் படப்பிடிப்புக்கு எப்போதும் சிம்பு தாமதமாக வருவார் என்பது அவர் மேல் எழுப்பப்படும் குற்றச்சாட்டாக அப்போது இருந்தது.

இந்த நிலையில் தற்சமயம் பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தன்னுடைய 48வது திரைப்படத்தில் நடித்து உள்ளார் சிம்பு. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இன்னும் கொஞ்ச நாட்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமலுடன் வாய்ப்பு:

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார் என்று பேச்சுக்களில் இருந்து வருகின்றன. எனவே இந்த படம் வெளியாகும் பட்சத்தில் அது சிம்புவிற்கு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு நடுவே சிம்பு நடிக்க இருந்து நடிக்காமல் போன திரைப்படங்கள் பல உண்டு. அப்படியாக இயக்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த திரைப்படம் ஏசி. இந்த திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக அசின் நடிக்க இருந்தார்.

அசின் படம்:

அதற்கு பிறகு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அசின் சினிமாவை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தற்சமயம் அந்த ஏசி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. திரும்பவும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதா? என்று இது குறித்து சிம்பு ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அசின் திரைத்துறைக்கு நடிக்க வராத நிலையில் எப்படி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்பதும் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version