தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இயக்குனர் அமீர் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகவும் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த படமாகவும் பார்க்கப்பட்டது.
அமீரின் வெற்றி படங்கள்:
இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹீட் அடித்ததை தொடர்ந்து. ராம் படத்தை 2005 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார்.
அந்த படமும் வெற்றி படமாக அமீருக்கு பெருமை சேர்த்தது. அடுத்ததாக மூன்றாவது ஆக அவர் இயக்கிய திரைப்படம் தான் பருத்திவீரன்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சூர்யாவின் தம்பியான கார்த்தியை அறிமுக நடிகராக உருவாக்கி மெருகேற்றி தன் படத்திற்கு ஏற்றவாறு பக்காவான பருத்திவீரனாக உருவாக்கி படம் எடுத்தார்.
அவரது கதாபாத்திரம் அவ்ளோ பக்காவாக கச்சிதமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே கொண்டாடும் அளவுக்கு அவரை உருவாக்கி நிறுத்தினார்.
கார்த்திக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தையும் இன்று சினிமாவில் நட்சத்திர நடிகராக அவர் ஜொலிப்பதற்கும் முக்கிய காரணமாகவும் அமீர் இருக்கிறார்.
கார்த்திக்கு அடையாளம் கொடுத்த அமீர்:
இந்த படம் வெளியாகி தமிழ் சினிமா அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
குறிப்பாக அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் யாருமே பார்த்ததில்லை என ரசிகர்கள் கூறும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை கோலிவுட் சினிமாவில் ஏற்படுத்தியது.
ஆனால் அமீருக்கும் அந்த படம் பெருமை சேர்க்கவில்லை. மாறாக நான் ஏன் தான் இந்த படத்தை எடுத்தேனோ? என வேதனை தான் பட்டார்.
அந்த அளவுக்கு அமீர் அந்த படத்தின் ரிலீஸ் அப்போ மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இப்படி ஒரு படத்தை நான் எடுத்து இருக்கவே கூடாது என அமீர் வேதனைப்பட்டார்.
பருத்திவீரன் பிரச்சனை:
10 வருடங்களாக அந்த படத்தின் பிரச்சனையிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து வந்தார் அமீர். ஆம் அமீருக்கு பண பிரச்சனையை கொடுத்ததோடு அவரை தயாரிப்பாளர் சங்கம் மிகவும் அசிங்கப்படுத்தியது.
அந்த பிரச்சனை இதுவரை ஓய்ந்த பாடே கிடையாது. கடந்த வருடம் கூட ஞானவேல் ராஜா அமீரை குறித்தும் பருத்திவீரன் படத்தை குறித்து மிகவும் மோசமாக பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து ஒட்டுமொத்த கோலிவுட் படைப்பாளிகளும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து உயர்த்தினார்கள்.
இதனால் ஞானவேல் ராஜாவை என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியில் மன்னிப்பு கேட்டுவிட்டு பிரச்சனைக்கு முடிவு கட்டினார்.
அமீருக்கு ஆதரவு கொடுத்த படைப்பாளிகள்:
இப்படி ஆக இந்த பிரச்சனை ஓய்ந்த பாடு இல்லாமல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அமீர் சமீபத்திய பேட்டியில் பருத்திவீரன் பட பிரச்சனையின் போது தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் துன்பங்கள் பற்றி பேசி இருக்கிறார்.
அவர் பேசியதாவது…. பருத்திவீரன் படத்தை எடுத்த போதே நான் தோற்றுவிட்டேன். புதுமுமுக நடிகரை கொண்டு வந்து படத்தை எடுத்து அந்த படத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் என்னுடைய சொந்த பணத்திலேயே முதலீடு மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினால் ரிலீஸ் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் என்னை ஒரு குற்றவாளி போல பார்த்தார்கள்.
மரியாதை கொடுக்காமல் என்னை இழிவு படுத்தினார்கள். கிட்டத்தட்ட 60 நாட்கள் நான் கைதி போல நின்றேன்.
அந்த சமயத்தில் கூட யாருமே எனக்கு உதவிக்கோ… சப்போர்ட்டாக ஒரு வார்த்தையோ யாருமே பேசவில்லை. நான் தனி ஆளாக அத்தனை பிரச்சனைகளையும் நின்று சமாளித்தேன்.
அன்றுதான் இப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கவே கூடாது என்னுடைய என்று ஆழ்மனதில் நினைத்தேன்.
அது மட்டுமில்லாமல் இந்த சமூகம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதை நான் அன்று தான் உணர்ந்தேன்.
பருத்தி வீரன் படத்திற்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் எல்லாம் என்னை கேள்வி கேட்டது தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சுயநலமாக நடந்துக்கொண்ட சூர்யா குடும்பம்:
இப்படி ஒரு பிரச்சனை தலைவிரித்து ஆடும் போது சம்பந்தப்பட்ட குடும்பம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் எனக்கு ஆதரவாக ஒரு குரல் கூட கொடுக்காமல் கமுக்கமாக இருந்து விட்டார்கள்.
ஆரம்பத்தில் நாம் தானே அவரிடம் கொண்டு போய் படம் எடுங்கள் என்று கேட்டோம். உதவி கேட்டோம்.
படத்தை எடுத்துவிட்டு அவர் இவ்வளவு பிரச்சனை சந்திக்கும்போது அவருக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று எண்ணம் கூட அவருக்கு வரவே இல்லை என சூர்யா குடும்பத்தை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் ஆமீர்.
அமீரின் இந்த உருக்கமான பேச்சு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
இதன் மூலம் சிவக்குமார் மற்றும் சூர்யா குடும்பம் எவ்வளவு சுயநலமாக நடந்து கொண்டார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.