சமீப காலமாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இருவரும் தங்களை காதலித்து கொள்ளலாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பேச்சும் பாலினம் மாறியவர்கள் அல்லது மூன்றாம் பாலினத்தவருடன் காதல் வயப்படலாம். திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பேச்சுக்களை இணையத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால் அப்படியான பதிவுகளுக்கு இணையவாசிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் இருக்கிறது. என்றாலும் கூட சினிமா பிரபலங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் அந்த செய்திகளை மக்கள் ஆதரிப்பது போலவும் இவை எல்லாம் சகஜமாகிவிட்டது என்பது போலவும் உருவகப்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வருவார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
சமீபத்தில் கூட கேரளாவில் ட்ரான்ஸ்ஜெண்டர்களுக்கு முதல் முறையாக குழந்தை பிறந்தது என்ற தகவல் வைரலாகி கொண்டு இருந்தது. ஆனால், அது செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு.
செய்தியின் தலைப்பை மட்டும் படித்து விட்டு செய்தியை புரிந்து கொள்ளும் நுனிப்புல் மேய்பவர்கள் நிஜமாவே ட்ரான்ஸ்ஜென்டர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதுதான் உண்மை என்று தான் நம்பியிருக்க கூடும்.
இன்னும் சொல்லப்போனால் குழந்தை பெற்றெடுத்த அந்த தம்பதி ட்ரான்ஸ்ஜென்டரே கிடையாது. கணவனை போல மேக்கப் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்.. மனைவியைப் போல மேக்கப் செய்து கொண்டிருக்கும் ஒரு ஆண்.. அவ்வளவுதான்.
இதனை ட்ரான்ஸ்ஜென்டர் என்றும் இவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது என்றும் அதிசயத்து.. எதுவும் நடக்க கூடாது நடந்து விட்டது போல செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன முன்னணியில் இருக்கும் ஊடகங்கள். இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை பெற்றது.
இது ஒரு பக்கம் இருக்க ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் விதமாக சமீப காலமாக வெப் சீரிஸ்கள் ஆல்பம் பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் என ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு விஷயம் வெளியாகிறது.. அதனை பார்த்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து சொல்வதற்குள் அடுத்த திரைப்படம் வெளியாகி விடுகிறது.
இப்படியான விஷயங்களை கண்டும் காணாமல் செல்கிறது அரசாங்கம். இன்னும் சொல்லப்போனால் பொதுமக்கள் சிலரும் கூட இப்படியான விஷயங்களில் கருத்து சொல்லாமல் கடந்து சென்று விடுகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள ஒரு தகவல் இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. இவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவான கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் எதிரான கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றது.
காதல் என்பது பொதுவுடமை என்ற திரைப்படத்தின் போஸ்டரை தன்னுடைய சமூக உலக பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஜோதிகா. இந்த போஸ்டரை வெளியிட்டு காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல.. அது இரண்டு இதயம் சார்ந்தது.. காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டு காதல் என்பது பொதுவுடமை என்ற போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஜோதிகா.
இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ஜோதிகாவை விமர்சித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். உச்சகட்டமாக அப்புறம் நீங்க எதுக்கு சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வளரும் தலைமுறை ஒரே காரணத்தில் காதலித்து திருமணம் செய்து கொள்ள நீங்கள் தூண்டுகிறீர்கள். உங்களுக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் யாராவது ஒருவர் உங்களுடைய மகள் இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா..? அல்லது உங்களுடைய மகன் இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ள சம்பதிப்பீர்களா..?
அப்படி சம்மதிப்பீர்கள் என்றால்… அதனை நீங்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும்.. காதல் என்பது பொதுவுடமை என்று உங்கள் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை எடுத்துக்கட்டாக காட்டுங்கள்.. அப்படி செய்ய மாட்டீர்கள் என்ற பட்சத்தில் இப்படியான விஷம கருத்துக்களை பொதுவெளியில் பரப்புவதை நிறுத்த வேண்டும்.
மேலும், கடந்த ஆட்சி காலத்தில் கோயில்கள் எதற்கு..? கோயில்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக மருத்துவமனைக்கு பணம் கொடுங்கள் என்று கூறிக் கொண்டு இருந்தீர்கள்.
இந்த ஆட்சியில் கடலில் 80 கோடியில்.. அதுவும் மக்கள் வரிப்பணத்தில்.. பேனா நிறுவப்பட இருக்கிறது என்று மக்களிடம் அரசு கருத்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் உங்களுடைய கருத்தை நீங்கள் பதிவு செய்யவில்லை என்று நடிகை ஜோதிகாவை சுற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நடிகை ஜோதிகா இதுக்கெல்லாம் விளக்கம் அளிப்பாரா..? அல்லது நம்முடைய வேலை முடிந்து விட்டது என்று ஓரமாக ஒதுங்கி விடுவாரா..? என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Summary in English : Recently, Jyothika made headlines when she said that love and gender have nothing to do with each other. This statement sparked a debate among her fans, with many of them asking why she married actor Suriya. In this article, we will explore the reasons behind her decision and how it can influence society’s views on love and gender.