காத்து மேல.. காத்து கீழ.. பாடலை கேட்ட தேனிசை தென்றல் தேவாவின் ரியாகஷனை பாருங்க..!

தமிழ் சினிமாவின் முத்தான இசையமைப்பாளரான தேவா கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களாக இசைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் தான் அமைந்திருக்கிறது .தேவா கானா பாடல்கள் எழுதியும் அந்த பாடல்களை தானே பாடியும் இசையமைப்பது தான் இவருக்கே உரித்தான ஸ்டைல் என்று கூறலாம்.

தேனிசை தென்றல் தேவா:

இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னை தமிழில் இருப்பதால் பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து மக்கள் மனதில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இடத்தை பிடித்தார் .

மேலும், மேற்கத்திய இசை கருவிகளை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையை பயின்று அதன் பின்னர் அதை கற்று தெரிந்து “தேனிசைத் தென்றல்”என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார் தேவா.

80க்களில் துவங்கிய இவரது இசைப்பயணம் தொடர்ச்சியாக 90 மற்றும் 2000 என தற்போது வரை மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக பார்க்கப்பட்டு வருகிறார்.

1989 ஆம் ஆண்டு வெளிவந்த மனசுக்கேத்த மகராசா என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் தேசிய திரைப்பட விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து புது மனிதன் ,வசந்தகால பறவை, அண்ணாமலை ,ஊர் மரியாதை ,பிரம்மச்சாரி ,சூரியன் ,தெற்கு தெரு மச்சான், உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து பெருமை பெற்றுள்ளார்.

“காத்தடிக்குது காத்தடிக்குது” ரீமிக்ஸ்:

அப்படித்தான் 1999 ல் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “நினைவிருக்கும் வரை” . இப்படத்தில் “காத்தடிக்குது காத்தடிக்குது” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.

இந்த பாடல் அப்போது மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த காலத்திலும் இந்த பாடலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் .

அந்த பாடலுக்கு பிரபுதேவா ஆடிய நடனம் அப்போதய ரசிகர்களை கொண்டாட வைத்தது . இந்த பாடலுக்கு மிகச்சிறந்த வகையில் இசையமைத்து கொடுத்தவர்தான் தேவா .

தற்போது அந்த காத்தடிக்குது காத்தடிக்குது பாடலின் ரீமேக் தான் “காத்து மேலே காத்து கீழே”. இந்த பாடல் தற்போது வைரலாகியுள்ளது.

தேவாவின் ரியாக்ஷன் :

புது வெர்ஷனில் வெளியாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி இணையத்தில் ட்ரெண்ட் செய்து விட்டார்கள்.

இந்த பாடலை ஆஃப்ரோ மற்றும் பால் டப்பா இருவரும் ரீமிக்ஸ் செய்து வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள்.

இந்த பாடலுக்கு பல பேர் எக்கச்சக்கமாக நடனமாடி ரீல் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் பலருக்கும் இந்த பாடல் பிடித்துப் போக ட்ரெண்ட் செய்து விட்டனர்.

தற்போது இந்த பாடலை இசையமைப்பாளர் தேவாவிடம் ஆஃப்ரோ காட்ட அதை பார்த்து மெர்சலாகிப் போன தேவா சூப்பரா இருக்குப்பா… இந்த இசை பிரஷ்ஷா…வித்தியாசமா இருக்கு… எக்ஸலன்ட் என பாராட்டி புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version