ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும்.. கமல் பிக்பாஸை விட்டு விலக அந்த நடிகர்தான் காரணம்..

தமிழில் பிக் பாஸ் என்று கூறினாலே அனைவருக்கும் நினைவு வரும் ஒரு நபராக கமல்ஹாசன்தான் இருப்பார். ஏனெனில் வெகு காலங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் கமல்ஹாசன்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக தமிழில் நடந்து வருகிறது.

7 வருடங்களாகவுமே அதை தொகுத்து வழங்குபவர் கமல்ஹாசன்தான் இதனால் பலருமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உரிமையாளரே கமல்ஹாசன்தான் அதை விஜய் டிவி வாங்கி ஒளிபரப்பு வருகிறது என்று தவறாக புரிந்து வருகின்றனர்.

ஈகோவில் கை வச்சா அதான் நடக்கும்

அந்த அளவிற்கு கமல்ஹாசன் பிக் பாஸ் தொடர்புடைய ஒரு ஆளாக இருந்தார். ஆரம்பத்தில் பிக் பாஸை அறிவார்ந்த விஷயமாக கமல்ஹாசன் கொண்டு சென்றாலும் போகப் போக டிவி சேனலின் டி.ஆர்.பிக்காக அதில் நிறைய மாற்றங்களை செய்தார்.

அதற்காக நிறைய விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார் கமல்ஹாசன் ஆனால் அதே சமயம் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வந்து செல்வதற்கு 100 கோடி வரை கமல்ஹாசன் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அப்போதைய நேரங்களில் கமல்ஹாசனுக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் இல்லை என்பதால் அந்த சம்பளம் அவருக்கு தேவையானதாக இருந்தது.

விலக அந்த நடிகர்தான் காரணம்

எனவே தொடர்ந்து அவர் பிக் பாஸில் பங்கு பெற்று வந்தார். இந்த நிலையில் வருகிற பிக்பாஸ் சீசன் 8இல் கமல் கலந்து கொள்ளவில்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன. கமல்ஹாசனே அதை அறிவித்தும் இருக்கிறார்.

பட வேலைகள் மற்றும் வேறு சில வேலைகள் இருப்பதால் பிக் பாஸில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அடுத்ததாக பிக் பாஸை தொகுத்து வழங்குபவராக விஜய் சேதுபதி இருப்பார் என்று கூறப்படுகிறது.

விலகிய கமல்

ஏற்கனவே அவர் மாஸ்டர் செஃப் என்கிற நிகழ்ச்சியை சன் டிவியில் தொகுத்து வழங்கியிருக்கிறார். எனவே இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என்று நம்பப்படுகிறது. இதற்கு நடுவே கமல்ஹாசன் உண்மையிலேயே பிக் பாஸை விட்டு செல்வதற்கான முக்கிய காரணம் விஜய் டிவி நிறுவனம்தான் என்று ஒரு பக்கம் செய்திகள் கசிந்துள்ளன.

அதாவது கமல்ஹாசன் அதிக தொகை வாங்கி வருவதால் கமல்ஹாசனிடம் விசாரித்த அதே சமயத்தில் மற்ற நடிகர்களிடமும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அது கமல்ஹாசனுக்கு தெரிந்த காரணத்தினால்தான் அவர் பிக் பாஸை விட்டு விலகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் முக்கிய படிப்பு ஒன்றை படிப்பதற்காக தான் கமல்ஹாசன் சென்று இருக்கிறார் என்பதே பரவலாக கூறப்படும் விஷயமாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version