தமிழ் சீரியலில் இதை ரொம்ப நேரம் பண்றாங்க.. என்னால முடியல.. கதறி அழும் நடிகை சைத்ரா ரெட்டி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

நல்ல அழகான தோற்றம், வசீகர பார்வை, ஹோமிலியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக ஏற்ற பெண் என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார் நடிகை சைத்ரா ரெட்டி .

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி:

இவர் முதன்முதலில் கன்னட சீரியல்களில் நடித்துதான் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார். அங்கிருந்து தான் தமிழ் சீரியல்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது.

முதன் முதலில் தமிழில் கயல் சீரியலில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார். பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடித்திருந்தார்.

இதனிடையே தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் நடித்து வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அவர் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

ஹிட் சீரியல்கள்:

பிரியா பவானி சங்கர் அவருக்கு பதிலாக அந்த சீரியலில் நடித்தவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. பெங்களூரை சொந்த ஊராக கொண்ட சைத்ரா ரெட்டி ஆரம்பத்தில் பல்வேறு கன்னட தொடர்களில் நடித்து அங்கு பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

தமிழ் மற்றும் கன்னட சீரியல்களில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சீரியல்களில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக் கொண்ட சைத்ரா ரெட்டிக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.

அஜித் படத்தில் சைத்ரா ரெட்டி:

முதல் திரைப்படம் அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். வலிமை திரைப்படத்தில் ஒரு அழுத்தமான மிக முக்கிய கதாபாத்திரமாக நடித்ததால் அவர் நல்ல அடையாளத்தை பெற்றார்.

தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. மேலும், சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த கயல் சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்து வந்தது.

கயல் சீரியலில் ஆலியா மானசாவின் கணவரான சஞ்சீவிற்கு ஜோடியாக இவர் நடித்து வருகிறார். இவர்களது பேர் மேட்சிங் அவ்வளவு பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர் .

டிஆர்பி லெவலில் சக்கை போடு போட்டு வருகிறது கயல் சீரியல். தமிழ் சீரியல் நடிகைகளிலே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக டாப் இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை சைத்ரா ரெட்டி.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை சைத்ரா ரெட்டி தமிழ் சீரியல்கள் குறித்து மிகுந்த மன வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் சீரியலில் ரொம்ப நேரம் பண்றாங்க:

அதாவது தமிழ் சீரியல்களில் ஷூட்டிங் கிட்டத்தட்ட இரவு 9 மணி முதல் 9: 30 மணி வரைக்கும் போகிறது. ஆனால், அதே கன்னட சீரியல் ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே பேக்கப் சொல்லிவிடுவார்கள்.

நான் முதன்முதலில் யாரடி நீ மோகினி சீரியல் நடித்துக் கொண்டிருந்த போது அந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது .

ஒரு கட்டத்தில் நான் அழவே தொடங்கி விட்டேன் . எனக்கு இந்த வேலையை தேவையில்லை இப்படி நான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே எனக்கு தேவை இல்லை என என் குடும்பத்தாரிடம் கூறி அழுதேன் என சைத்ரா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version