பெரிய தொகை குடுத்து.. இதை பண்ண சொன்னாங்க.. பட வாய்ப்பு குறித்து Meesha Ghoshal..!

தமிழ் சினிமாவில் ஒரு சில குணச்சித்திர நடிகைகள் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோயினுக்கு ஏற்ற தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வார்கள்.

அப்படி அவர்களுக்கு அமையும் வாய்ப்புகள் மிகப்பெரிய அடையாளத்தை அவர்களது எதிர்காலத்தில் ஏற்படுத்தி கொடுக்கும்.

நயன்தாரா தோழியாக மீஷா கோஷல்:

அப்படித்தான் நடிகை மீஷா கோஷல் நயன்தாராவின் தோழியாக ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததத்தின் மூலமாக அவருக்கு மிகப்பெரிய அடையாளம் ஏற்பட்டது.

அவர் வேறு எந்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும் கூட ராஜா ராணி தோழி என்றுதான் பலரும் அவரை அடையாளம் கண்டு கொள்கிறார்கள் .

அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் படம் முழுக்க நயன்தாரா உடனே ட்ராவல் செய்வார். அந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாகவும் அமைந்திருந்தது.

இவர் ராஜா ராணி படத்திற்கு முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து அறிமுகமாகி இருந்தார்.

மேலும் நான் மகான் அல்ல திரைப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு தோழியாக நடித்தும் தனது அறிமுகத்தை சினிமாவில் பதித்தார்.

குணசித்திர ரோல்கள்:

மேலும் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி பின்னர் இஷ்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அத்துடன் வணக்கம் சென்னை திரைப்படத்தில் மது என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து இப்படி பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர கதாநாயகியாக நடித்து தனது தனது திரை வாழ்க்கையை கடந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்ற இவர் சினிமாவை தாண்டி விளையாட்டு துறையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

இவர் நீச்சல் போட்டியில் அதிகம் ஆர்வம் உடையவராக பல போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்றிருக்கிறார்.

விளையாட்டுத்துறையில் ஆர்வம்:

அத்தோட பேட்மிட்டன் லீக் போட்டியிலும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவராக தென்பட்டு வருகிறார். இதிலேயே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காமல் இருந்தது.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் அதாவது ஒரு டூயட் பாடிவிட்டு மட்டும் செத்துப் போகும் நாயகியை விட கேரக்டர் ரோல் என்பது மிகவும் நல்லது.

அதிலும் அந்த கேரக்டர் ரோல் படம் முழுக்க பயணிக்க வேண்டும் எனவும் அவர் வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதற்காக தான் எனக்கு சினிமா வாய்ப்பு போனதாகவும் அவர் சொல்லாமல் கூறியிருக்கிறார் அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர்,

எனக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து நான்கு ஐந்து காட்சிகளில் நடிக்க சொல்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை நான் வேண்டாம் என நிராகரித்திருக்கிறேன்.

அப்படி நடிப்பதற்கு நடிக்காமலே இருக்கலாம்:

எனக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் சரி சம்பளமே கொடுக்கவில்லை என்றாலும் சரி படம் முழுக்க பயணிக்க கூடிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் ஒரு கொள்கையை வைத்திருக்கிறேன்.

இதனால் தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கைவிட்டு போனது . என்னுடைய படங்களும் குறைவாக வருகிறது.

மற்றபடி இந்த படத்தில் தான் நடிக்க வேண்டும். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று எந்த ஒரு கட்டுப்பாடும் எனக்கு கிடையாது.

ஒன்று இரண்டு காட்சிகளில் நடிப்பதற்கு பதிலாக நடிக்காமல் இருந்து விடலாம் என்ற ஒரு எண்ணம் தான் எனக்கு இருக்கிறது. இதனுடைய தனிப்பட்ட முடிவு என பதிவு செய்திருக்கிறார் நடிகை மீஷா கோஷல்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam