Pear ஷேப்பில் இருக்கும் என் உடம்பை பார்த்து அப்படி சொன்னாங்க.. ஆனா நான்.. மிருணாள் தாகூர் அதிரடி..!

பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மிருணாள் தாக்கூர். இவர் நட்சத்திர நடிகையாக தற்போது ஜொளித்துக் கொண்டிருக்கிறார்.

மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர்:

அது மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில்
மிருனாள் தாக்கூர் இடத்தை பிடித்திருக்கிறார்.

காரணம் இவர் துல்கர் சல்மானுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த சீதாராமன் திரைப்படத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் மிருணாள் தாகூர் கேரக்டர் எல்லோருக்கும் மனதில் பதியும்படியாக அமைந்துவிட்டது.

இந்த ரோல் அவருக்கு பக்காவாக அமைய அவரது அவரவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டார்.

எனவே இதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் மிகவும் ஃபேவரைட் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருகிறார்.

சீரியல் நடிகையாக மிருணாள் தாகூர்:

மிருனாள் தாகூர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு சீரியல்களின் நடிக்க தொடங்கினார்.

இவர் இனிய இரு மலர்கள் சீரியல்களின் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

இந்த இந்த தொடர் பாலிவுட்டில் வெளியான கும்கும் பாக்யா தொடரின் இந்தி தமிழ் ரீமிக்ஸ் தான். இந்த தொடர் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அதன் மூலம் அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இதனிடையில் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுமோசமாக ஆபாச காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகினாலும் அந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது.

ஆபாச பட சர்ச்சையில் சிக்கி பிரபலம்:

லஸ்ட் ஸ்டோரீஸ் மூலம் கிடைத்த சர்ச்சையில் மூலம் பிரபலம் ஆகிய மிருணாள் தாகூர் கு தொடர்ந்து,

அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மக்களின் மனதில் இன்று பிரபலமான நடிகையாக உள்ளார்.

இவரது அழகும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கும் போதே தன்னுடைய உடலமைப்பை குறித்து வெளிவந்த கிண்டல் கேலி குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஆம், நடிகை மிருணாள் தாகூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது என்னுடைய Pear ஷேப் உடம்பை பார்த்து பலரும் கேலி செய்திருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் ஆடிஷனல் கலந்து கொள்ளும்போது இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

ஆனால், ஒரு கட்டத்தில் என்னுடைய இதே உடம்பை வைத்துக்கொண்டு என்னுடைய வளைவுகளை காட்டி ரசிகர்களை கவர முடியும்.

கிண்டலுக்குள்ளான Pear ஷேப் உடம்பு:

எந்த வகையான உடல்வாக இருந்தாலும் அது நம்முடைய உடல், அதனை நாம் பிறருடைய கேலிகளுக்கு பயந்து மன உளைச்சல் கொள்ள தேவை இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

தற்போது உங்கள் முன்பு முன்னணி நடிகையாக நிற்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகை மிருணாள் தாகூர். இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஒருவர் தங்களுடைய உடல்வாகை நினைத்து குற்ற உணர்வு கொள்ள தேவையில்லை. அவர்களுக்கு இருப்பது போல் நமக்கு இல்லையே என்று வருத்தப்படாமல்,

அதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும் என்பதற்கு மிருணாள் தாகூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பேசி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version