கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அபிதா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்றுக் கொண்டவர்.
அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற நெடுந் தொடரில் 2007 முதல் 2013 வரை நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.
திருமதி செல்வம் அபிதா..
திரையுலகில் நடிக்க அபிதா 1997-இல் எட்டுப்பட்டி ராசா என்ற படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து 1998-இல் கோல்மால் 1999-இல் தேவதாசி, சேது படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் சேது படத்தில் அபிதக்குசலாம்பாளாக நடித்து பெரிய அளவில் பேசப்படக்கூடிய நடிகையாக ஃபேமஸ் ஆனார். இதனை அடுத்து 2021-இல் சீறிவரும் காளை, பூவே பெண் பூவே என்ற படத்தில் நடித்த இவர் 2004-இல் அரசாட்சி, 2005-இல் உணர்ச்சிகள் 2006-இல் சுயாட்சி எம்எல்ஏ 2007-இல் நம் நாடு போன்ற படங்களில் நடித்த அசத்தியிருக்கிறார்.
கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியும்..
இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து இவர் சீரியல் பக்கம் தலைக்காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் நடிக்க இருந்தது பற்றி அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
மேலும் இந்த பேட்டியின் போது அவர் திருமதி செல்வம் தொடரில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் அதன் இயக்குனர்கள் ராதா மற்றும் மற்றொருவர் இவரிடம் கதை மட்டும் கேளுங்கள் பிடித்திருந்தால் நடிக்கலாம் என்று கூறியதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் அந்த சீரியலில் நிச்சயமாக நடிக்க கூடாது என்ற மனநிலையில் இருந்த நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருப்பதால் சீரியல்களில் நடிக்க எண்ணமே இல்லை என்று தெரிவித்தும் அவர்கள் கதை கேட்கும் படி வற்புறுத்தினார்கள்.
மேனேஜர் வற்புறுத்தி.. வெளிவந்த உண்மை..
இதனை அடுத்து அந்த சீரியலின் மேனேஜர் வற்புறுத்தி கூறியதால் கதை சொல்ல வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவர்களும் கதை சொல்ல வீட்டுக்கு வரும் போது தலை நிறைய எண்ணெய்யை வைத்து எண்ணெய் வழிவது போல் முகத்தை வைத்துக் கொண்டு கதையைக் கேட்டேன்.
இதற்குக் காரணம் சீரியல் கதைக்கு நான் பொருத்தமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் தலை நிறைய எண்ணெய்யை வைத்து நன்கு படிய சீவி அவர்கள் முன் அமர்ந்து கதை கேட்டதாக நடிகை அபிதா தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்த கதை எனக்கு பிடித்துப் போக அதில் நடித்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்ததாக அவர் சொல்லிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் திரைப்படங்களில் நடித்த போது அடைய முடியாத ரிச்சையும் ஃபேமஸையும் திருமதி செல்வம் சீரியல் ஆனது இவருக்கு பெற்று தந்தது என்பதை எவரும் எளிதில் மறுக்க முடியாது.
ஒரு வேளை இந்த சீரியலை அபிதா மிஸ் செய்திருந்தால் இந்த அளவுக்கு பெயர் பெற்றிருப்பாரா? என்பது சந்தேகம் தான் என்பது போல ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றிவிட்டார்கள்.
மேலும் இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்க கூடிய விஷயம் பற்றி ரசிகர்கள் அனைவரும் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.