2024 தேர்தலில் திருமாவளவன் முதலில் டெபாசிட் வாங்குவாரா ? அண்ணாமலை!

நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவனால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒருவழியாக நடந்துமுடிந்து நேற்று அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற இவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இதைத்தொடர்ந்து தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக, நாதக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இளங்கோவனின் வெற்றி குறித்த தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவுடன் சேர்ந்த காரணத்தாலேயே அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் அண்மையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, கூட்டணிக் கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவதாக குறிப்பிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 2024 தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் கூட வாங்கமாட்டார் என்று கடுமையாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, ”விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மாறி மாறி பேசிவருகிறார். கூட்டணிக் கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடுவதாக அவர் சொல்வது தவறு.

பிற கட்சிகளின் விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிடாது. 2024 தேர்தலில் திருமாவளவன் டெபாசிட் வாங்குவது கூட கடினம் தான். திமுக கூட்டணியை விட்டு வெளியே வர திருமாவளவன் முடிவுசெய்துவிட்டார். தைரியமாக வெளியே வரட்டும்.

விசிகவின் கோட்டை என்று சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

இதுபோல சுவாரசியமான அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …