தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த எத்தனையோ நடிகைகள் சில காலம் கழித்து ஆள் அட்ரஸ் தெரியாமல் போனதுண்டு.
ஒரு காலத்தில் நட்சத்திர நடிகையாக தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த பல நடிகைகள் பின்னர் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட் இழந்து ஆல் அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு.
நடிகை மல்லிகா:
அது போன்ற லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை மல்லிகா. இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் பாராட்டப்பட்டார்.
ஒரு சில நடிகர் திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும் அளவிற்கு தன்னுடைய அசாத்திய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் தான் நடிகை மல்லிகா.
இவர் விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருப்பார் .
பேரரசு இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் நடித்திருந்தார்கள் .
திருப்பாச்சி தங்கை :
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படமாக அப்போது பார்க்கப்பட்டது. கில்லி படத்தின் மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த இந்த திரைப்படம் மீண்டும் அவர்களுக்கு மெகா ஹிட் கொடுத்தது.
அவர்களுக்கு மட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்த பசுபதி, மனோஜ் கே ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மற்றும் நடிகை மல்லிகா உள்ளிட்ட பலரது கேரக்டரும் அவரது ரோல்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது அப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை மல்லிகாவின் கதாபாத்திரம் தான்.
அந்த திரைப்படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் அவ்வளவு சூப்பராக வொர்க் அவுட் ஆகி இருக்கும். ரசிகர்களின் மனதை கவர்ந்த காட்சிகள் அண்ணன் தங்கை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
விஜய்யின் தங்கையாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகை மல்லிகா .
துருதுருவென நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈத்த மல்லிகாவுக்கு தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
விஜய்யின் திருப்பாச்சி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை மல்லிகா முன்னதாக சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படத்தின் மூலமாகத்தான் நாயகியாக அறிமுகமானார்.
ஆனால் இவரை பிரபலப்படுத்தியது என்னவோ விஜய்யின் திருப்பாச்சி படம் தான். கடைசியாக நடிகை மல்லிகா சேரன், சரத்குமார், பிரசன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்:
இப்படி தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருந்த நடிகை மல்லிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .
அட நம்ம மல்லிகா தங்கச்சியா இது?என பார்த்து ஷாக் ஆகும் அளவுக்கு அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
குடும்பம் குழந்தைகளுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு மல்லிகா எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.