சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஆங்கிலோ – இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய 10 வயது முதல் ‘யங் இசுடார்சு’ எனும் குழுவில் பாடல் பாடி வருகிறார்.
இவர் திரைப்படத்துறையில் பின்னணி பாடகி ஆகவும் பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பவராகவும் இருந்து வந்தார்.
நடிகை ஆண்ட்ரியா:
அதன் பிறகு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த “பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானார் .
பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் நடிகை ஆண்ட்ரியா .
தொடர்ந்து அவர் மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி ,துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையானார்.
தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திர நடிகையாக இருந்து வரும் ஆண்ட்ரியா ஒவ்வொரு படத்திற்கும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்திற்கு ஈர்த்துவிடுவார்.
கவினுடன் நடிக்கிறேன்:
கடைசியாக வெளிவந்த பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதில் பல பிரச்சனை இருக்கிறதால் தொடர்ந்து தள்ளிப் போட்டு கொண்டே ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
அதை அடுத்து தற்போது கவின் உடன் “மாஸ்க்” என்கிற திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
இதனிடையே பல்வேறு தனியார் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் புதுச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் போது செய்தியாளர்களிடம் பேசினார்.
நான் தற்போது கவின் உடன் “மாஸ்க்” என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறேன். நான் படங்களில் பாடல் பாடி நீண்ட நாள் ஆகிவிட்டது. விரைவில் பாடலும் பாட இருக்கிறேன்.
சினிமாவில் ஒரே மாதிரியான கதைக்களம் கொண்ட படத்தில் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை.
அதனால் வித்தியாசமாக ஹாரர் ,அட்வென்சர், காதல் மற்றும் திரில்லர் கதைகளிலில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன்.
அது அத்தனையிலும் நான் நடித்து விட்டேன். ஆனால், வரலாற்று கதைகளில் நடிக்கும் ஆசை எனக்கு சுத்தமாக இல்லவே இல்லை .
விஜய் மட்டுமல்ல யாரா இருந்தாலும் என்னோட பதில்:
வடசென்னை இரண்டாம் பாகம் உருவானால் நிச்சயம் நான் அதில் சந்திரா கேரக்டரில் நடிப்பேன் என உறுதியாக கூறியிருந்தார்.
மேலும், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆண்ட்ரியாவிடம் கேள்வி கேட்டதற்கு… விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி தான்.
அதற்கு மேல் அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது…. எனக்கும் அரசியலுக்கும் எதுவும்சம்மந்தம் இல்லை. நான் விஜய்க்காக மட்டும் இப்படி ஒரு பதில் சொல்லவில்லை.
யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவது பற்றி என்னுடைய கருத்து வரட்டும் வந்தால் நல்லது தான்.
ஆனால், அதற்கு மேல் எனக்கு அதைப் பற்றி பேசுவதற்கு தெரியாது என தடாலடியாக பதில் கொடுத்தார் ஆண்ட்ரியா.