நெப்போலியன் மகன் இந்த விஷயத்துல தான் வீக்..! ஆனால்.. அதுல.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் அமர்ந்த வண்ணமே இருப்பார்.

இதனால் உயரிய சிகிச்சைக்காக நெப்போலியன் குடும்பத்தோடு அமெரிக்கா என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

நெப்போலியன் மகனுக்கு உள்ள நோய்:

இந்த நிலையில் தனது மகன் தனுஷுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. தசை சிதைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரு நோயாளிக்கு திருமணம் செய்வதை பலர் விமர்சித்தனர்.

இந்த நிலையில் தசை சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிலிருந்து சாதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளராக நாவல் காந்தி தசைசிதைவு நோய் பற்றியும் அந்த நோயின் தாக்கம் ஆரம்பத்தில் எப்படி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதாவது, ஆரம்ப காலகட்டத்தில் இலட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த தசை சிதைவு நோய் இருக்கும். ஆனால், இப்போதைய காலகட்டத்தில் 30 ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த நோயின் தாக்கம் ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவில் தெரியாது. ஒரு கட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களால் நடக்க முடியாமல் எழுந்து கூட உட்கார முடியாமல் படுத்த படுக்கையாகவே மாறி விடுவார்கள்.

லட்சத்தில் ஒருவருக்கு தசை சிதைவு:

இதனால் இந்த நோய் பற்றி ஆரம்பத்தில் புரிதல் பெரிதாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது இதைப்பற்றி பலரும் தெரிய தொடங்கி இருக்கிறார்கள் .

அதிலும் நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு இந்த நோய் பாதிக்கப்பட்ட பிறகு இது பற்றி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

நெப்போலியனும் தன்னுடைய மகனின் நிலையைப் பற்றி ஆரம்பத்தில் இருந்து வெளிப்படையாக தெரிவித்திருந்தார் .

அது மட்டும் இல்லாமல் அவர் கட்டிய மருத்துவமனைகளில் பலர் இன்று அந்த நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

இருந்தாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களால் அதிலிருந்து முழுமையாக குணமாகவே முடியாது. இதற்கான காரணம் சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய தன்னம்பிக்கையால் மட்டும் தான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை நடத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாவல் காந்திக்கு 45 வயதாகிறது. இவர் 10 வயது வரைக்கும் எல்லோரையும் போலவே தான் இருந்தாராம். அதன் பிறகு தான் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டள்ளார்.

ஆனாலும், தனது முயற்சியையும் கனவையும் விட்டு விடாத நாவல் காந்தி புத்தகங்கள், நாவல், கவிதை, கட்டூரை என தொடர்ச்சியாக எழுதி சாதனை படைத்திருக்கிறார்.

நெப்போலியன் மகன் இதில் வீக்:

எனக்கு 10 வயசாக இருக்கும் போது என்னுடைய குதிகால் பகுதி தரையில் ஊன்ற முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டது. அந்த சமயத்தில் என்னுடைய பெருவிரல் தடுக்கி நானே கீழே விழுந்து விட்டேன்.

அந்த நேரத்தில் என்னவென்று தெரியாமல் இருந்தோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது .

எனக்கு காலில் எந்தவிதமான உணர்ச்சி இல்லாமல் ஆகிவிட்டது. நான் திடீரென கீழே விழுந்து விடுவேன். பிறகு என்னுடைய நண்பர்கள் தான் என்னை தூக்கிக் கொண்டு வருவார்கள் .

அதன் பிறகு என்னுடைய அம்மா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கூட்டிப் போயிருந்தார் அங்கு தான் என்னை செக் பண்ணி பார்த்த டாக்டர் தசை சிதைவு நோய் இருக்கிறது என கூறினார்.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்று கேட்டீர்களானால்… நான் 21 வயதுக்கு மேல் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை .

அப்படி இருந்தாலும் படுத்த படுக்கையாகவே நான் மாறி விடுவேன் என மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

இருந்தாலும் நான் தொடர்ந்து படித்துக்கொண்டு எனது கடமை நோக்கி ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன். எனவே இதே நிலைமை தான் நெப்போலியன் மகனுக்கும் என நாவல் காந்தி தெரிவித்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version