GV Prakash விட்டு பிரிய இது தான் காரணமே இது தான்..! உண்மையை உடைத்த SAINDHAVI..!

சமீப நாட்களாக நட்சத்திர ஜோடிகள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் பின்னர் திடீரென இருவரும் பிரிந்து போவதாக கூறி விவாகரத்து செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் சமந்தா – நாகா சைதன்யா, தனுஷ் – ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து அறிவிப்பு:

அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இசை குடும்பத்தை சேர்ந்த ஜாம்பவான்களாக ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஜோடி தாங்கள் பிரிந்து போவதாக கூறி அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.

இதனை யாராலும் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இந்த விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த பதிவில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒருசேர கூறியிருப்பது என்னவென்றால்.

பல கட்ட யோசனைகளுக்கு பிறகு திருமணம் ஆகி எங்களுக்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் முறையாக பிரிந்து செல்ல முடிவெடுத்திருக்கிறோம்.

இது இருவரது பரஸ்பர முடிவு தான். எனவே இந்த ஒரு முடிவை நாங்கள் மிகவும் மரியாதையோடு மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக எடுத்திருக்கிறோம்.

எனவே இது தனிப்பட்ட எங்களின் முடிவு. தனியுரிமை புரிந்து கொண்டு எங்கள் முடிவை மதிக்குமாறு ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பிரிந்து வாழ போகிறோம் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஒருவருக்கொருவர் சிறந்த முடிவுக்கு எடுத்து இதை கூறுகிறோம்.

இந்த முடிவில் நாங்கள் இருவரும் ஸ்ட்ராங்காக இருக்கிறோம் இந்த கடினமான நேரத்தில் உங்களது புரிதல் மற்றும் ஆறுதல் நிறைய பலத்தை கொடுத்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்கள்.

இவர்களின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.

காதல் திருமணம்:

இதனிடையே சைந்தவி ஜிவி பிரகாஷ் இருவருமே சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருந்தார்கள்.

பள்ளி தோழர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடியும் இசையமைத்தும் இருக்கிறார்கள். இவர்களுக்கு கடந்த 2020இல் ஒரு குழந்தையும் பிறந்தது.

இப்படியான நேரத்தில் சைந்தவி திடீரென விவாகரத்து செய்து பிரிந்து போவதற்கான காரணம் என்று கூறப்படுவது என்னவென்றால்,

ஜிவி பிரகாஷ் சமீப காலமாக தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் மிக நெருக்கமாக படுக்கையறை காட்சிகளும், முத்த காட்சிகளும் நடிப்பதாக கூறப்படுகிறது.

நடிகைகளுடன் ஜிவி பிரகாஷ் தகாத உறவு:

இது சைந்தவிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் சில நடிகைகளுடன் அவர் நெருக்கமாக பழகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையில் முடிந்துள்ளது. இதை அடுத்து கடந்த 6 மாத காலமாக இருவரும் தனித்தனியே தான் வசித்து வருகிறார்கள்.

இருவரும் சந்தித்துக் கொள்வது கூட இல்லையாம். இப்படி ஒரு சமயத்தில் தான் இவர்கள் இந்த தீர்க்கமான முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டு தங்களது திருமண நாளை கொண்டாடிய போது சைந்தவி ஒரு பதிவிட்டிருந்தார் அந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்தப் பதிவில் சைந்தவி கூறியுள்ளது, என்னுடைய அன்பு கணவருக்கு 10வது வருட திருமண நாள் வாழ்த்துக்கள்.

அன்பு கணவர் – சைந்தவியின் பதிவு வைரல்:

நேற்று தான் திருமணம் நடந்தது போல் இருக்கிறது. அதற்குள் நாங்கள் பத்தாவது வருட திருமண நாளை கொண்டாடுகிறோம்.

எங்கள் மகளுக்கு ஒரு அற்புதமான நண்பர், அற்புதமான கணவர், நம்ப முடியாத தந்தையாக இருப்பதற்கு நன்றி. நீங்கள் மிகவும் அற்புதமான மனிதராக இருப்பதற்கும் நன்றி.

நிலா இருக்கும் தூரத்தை விட அதிகமாக உன்னை நேசிக்கிறேன் .10 ஆண்டுகள் முடிந்து விட்டது.

இன்னும் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் என சைந்தவி மிகுந்த காதலோடு பதிவிட்டு இருக்கிறார்.

அவரின் இந்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி இப்படிப்பட்ட ஜோடி பிரிந்ததற்கான காரணம் என்ன இருக்கக்கூடும் என பலரும் யோகித்து வருகிறார்கள்.

இவர்களின் இந்த விவாகரத்து விவகாரம் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பகிரப்பட்டு ட்ரெண்டிங் செய்தியாக பேசப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version