இந்த வயசுல அது கேட்குதா? கேவலமா கேட்டாங்க – ஓப்பனா கூறிய பப்லு!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

90க்களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் 2000 கால கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட நடித்து சீரியல்களிலும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார் .

பப்லு பிரித்திவிராஜ்:

பல்வேறு சீரியல்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த பப்லூ இல்லத்தரசிகள் இடையே மிகவும் ஃபேமஸ் ஆகி இருந்தார்.

பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட பப்லூ பிரிதிவிராஜ் “நான் வாழவைப்பேன்” என்ற திரைப்படத்தில் 1979இல் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார் .

கே பாலசந்தர் இயக்கிய “வானமே எல்லை” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கை துவங்கினார்.

தொடர்ந்து சில சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த பப்லு 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

ரமணி vs ரமணி , மர்ம தேசம், சவால், அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜோடி நம்பர் 1 இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் தனது நடன திறமையும் வெளிப்படுத்தியிருந்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகர் சிம்பு இருந்தார். அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

58 வயசுல இரண்டாம் திருமணம்:

தற்போது 58 வயதாகும் பிருத்திவிராஜ் இன்னும் தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைத்துக்கொண்டு மிரட்டலான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் .

இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஹீத் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

மகனுக்கு 28 வயது ஆகும் நிலையில் தற்போது நடிகர் பிரிதிவிராஜ் ஷீத்தல் என்ற 27 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் .

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசி சர்ச்சைக்குள்ளானவராக பார்க்கப்பட்டார் பப்லூ.

அதுமட்டுமில்லாமல் இந்த இளம் பெண்ணுடன் ரிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது தனது ரொமான்டிக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்களின் மோசமான கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருந்தார்.

இதனடி இந்த ஜோடி திடீரென பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் சீத்தல் உடனான லிவிங் ரிலேஷன்ஷிப் காதல் மற்றும் பிரிவு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது ஷீத்தல் எனக்கு அறிமுகமான சமயத்தில் அவருக்கு 24 வயசு தான் எனக்கு 55 வயது நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் ஆரம்பத்தில் பழகினோம் .

இந்த வயசுல அது கேட்குதா?

பின்னர் காதலித்தும் எங்களுக்கு இடையே நல்ல புரிதல் தான் இருந்தது. என்னை மிகவும் சாதாரணமாக சீத்தல் ஏற்றுக்கொண்டாள்.

ஆனால் இதற்கு நான் வாங்கிய ஏச்சு பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சம் நெஞ்சம் அல்ல… மக்கள் பல பேர் எங்களை மோசமாக விமர்சித்து தள்ளினார்கள்.

50 வயசான உனக்கு 24 வயசு பொண்ணு கேக்குதா? என சொல்லி என்னை வறுத்து எடுத்தார்கள்.

அதையும் தாண்டி இந்த வயதில் அது உனக்கு கேக்குதா? அது உனக்கு தேவைப்படுதா? என சிலர் மிகவும் மோசமாக திட்டினார்கள்.

அப்போதுதான் எங்களுக்குள் ஒரு எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் எங்களுக்கே இதெல்லாம் நமக்குத் தேவையா?என்று எண்ணம் வந்துவிட்டது.

அதனால் தான் ஷீட்டில் உடனான காதலையும் முறித்துக் கொண்டேன் என பப்லு ப்ரித்விராஜ் மிகுந்த வேதனையோடு இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version