இது தான் எல்லாத்துக்கும் காரணம்.. விவாகரத்து குறித்து வாய் திறந்த நடிகை நளினி..!

திரைத்துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் காலம் காலமாக பார்க்கப்பட்டு வருவது தான்.

அவர்கள் ரீல் வாழ்க்கையில் ஜோடிகளாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் ரியலாகவே காதலில் விழுந்து இருவரும் மனப்பூர்வமாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திரைத்துறை நிஜ ஜோடிகள்;

ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த காதல் வாழ்க்கை நிலைத்திருக்கிறது. ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக சில பிரச்சினை காரணமாக பிரிந்து விடுகிறார்கள் .

அப்படித்தான் காதலித்தபோது மிகச்சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு திருமணம் செய்து கொண்டு நளினி மற்றும் ராமராஜன் இருவரும் உண்மையிலேயே காதலித்து ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்கள் .

அப்படிப்பட்ட ஜோடி திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் ஏன் இவர்கள் பிரிந்தார்கள் என்ன காரணம்?என இன்று வரை ரசிகர்கள் பலரும் குழம்பி போய் கேள்வி கேட்கும் அளவுக்கு இருந்து வருகிறார்கள் .

அதீத காதல் கொண்ட நளினி:

அது மட்டும் இல்லாமல் நளினி பல பேட்டிகளில் ராமராஜன் மீது மிகுந்த மரியாதையோடு வைத்திருப்பதையும் அவர்தான் தனக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் புருஷன் என வெளிப்படையாக கூறி வருகிறார்.

இவ்வளவு காதல் வைத்திருக்கும் நளினி ஏன் அவரை பிரிந்தார் என்ன காரணம்? என பலமுறை கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான உண்மை காரணத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார் நளினி.

ஆம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அன்பு கணவரான ராமராஜனை ஏன் பிரிந்தேன் என்பது குறித்த ரகசிய உண்மையை உடைத்து இருக்கிறார் .

அதாவது, நான் எத்தனை ஜென்மம் இருந்தாலும் எனக்கு அவர் தான் புருஷனாக வேண்டும் அவர்தான் என் கணவர் நானும் அவரும் தற்போது கூட நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறோம் .

ராமராஜனை பிரிந்தது ஏன்?

எங்களுக்கு நேரம் சரியில்லை. நாங்கள் பிரிந்திருந்தால் நல்லது என்று ஜோசியர் ஒருவர் கூறினார். அது மட்டும் இல்லாமல் பிள்ளைகள் தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை.

அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என ஜாதகரீதியாக சில காரணங்கள் இருந்ததால் நாங்கள் விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம் .

ஆனால், எங்களுக்குள் இருக்கும் காதல் இன்று வரை குறையவே இல்லை. ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையோடு இருக்கிறோம்.

ஜாதகத்தை நம்பி மனைவியை விட்டுச்சென்ற ராமராஜன்:

இன்றும் அவர் என்னுடைய புருஷன் தான் என கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ராமராஜனுக்கு ஜாதகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

எனவே நாங்கள் பிரிந்து வாழலாம் என கூறியதால் அவரின் நம்பிக்கைக்கு மரியாதை கொடுத்து நாங்கள் விவாகரத்து செய்து தற்போது தனித்தனியே வாழ்ந்து வருகிறோம் என நளினி கூறி இருக்கிறார் .

இந்த காரணத்தை கேட்ட ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். இப்படியும் ஒரு காதல் ஜோடியா? என வியக்கும் அளவுக்கு அவர்கள் நடந்து கொண்டதை பார்த்து பலரும் பாராட்டினாலும் சிலர் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

என்ன தான் இருந்தாலும் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி வருகிறார்கள். நடிகை நளினி 80க்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

இவர் மோகன்லால், மம்முட்டி, விஜயகாந்த் ,சத்யராஜ் ,மோகன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த வந்தார் .

1987ல் ராமராஜனை பெற்றோர்களை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார் பின்னர் இவர்களுக்கு அருணா மற்றும் அருள் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் , சீரியல்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version