20 கோடி ரூபாய்.. அதையும் தாண்டி இப்படி ஒரு பிரச்சனை.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து.. பிரபல நடிகர் பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி முதன் முதலில் தனது அண்ணன் மோகன் இயக்கத்தில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் சாக்லேட் பாயாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் வெற்றிகளை குவித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார் நடிகர் ஜெயம்ரவி.

நடிகர் ஜெயம் ரவி:

மிகச் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டு வந்த இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம் உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படங்களாக பார்க்கப்பட்டது.

மேலும், தில்லாலங்கடி, எங்கேயும் காதல், பூலோகம், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் இப்படி பல வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி .

இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வணிக ரீதியாக கொண்டாடப்படும் நடிகராக ஜெயம் ரவி இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஜெயம் ரவி இதுவரை எத்தனையோ நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருந்த போதிலும் யாருடனும் காதல் கிசுகிசுக்கப்பட்டதே கிடையாது .

ஆர்த்தியுடன் காதல் திருமணம்:

அவ்வளவு ஜென்டிலான ஒரு நடிகராக இருந்து வந்தார். இப்படி இருக்கும் சமயத்தில் இவர் பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் .

கடந்த 2009 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருப்பார். “குறும்பா” பாடலின் மூலம் ஆரவ் தமிழ் மக்களிடையே பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

குடும்பம், குழந்தைகள், தொடர் வெற்றி திரைப்படங்கள், இப்படி நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்தார் நடிகர் ஜெயம் ரவி.

திடீர் விவாகரத்து:

மிகச்சிறந்த வாழ்க்கையும் வாழ்ந்து வந்த சமயத்தில் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை திடீரென ஆர்த்தியை விவாகரத்து செய்து இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

இதில் ஆர்த்திக்கு கொஞ்சம் கூட உடன்பாடு விருப்பமே இல்லை எனக் கூறப்படுகிறது. ஜெயம் ரவி தான் மிகுந்த மன உளைச்சலால் மனைவியை பிடிக்காமல் விவாகரத்து செய்திருப்பதாக வெளிவரும் தகவல்கள் கூறுகிறது .

இந்த நிலையில் இவர்களின் இந்த விவாகரத்துக்கு காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நடித்த போது நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகியது என வதந்தி செய்திகள் வெளியாகி இருக்கிறது .

மேலும் சில பல செய்திகள் விதவிதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்திற்கு முக்கிய காரணமே ஜெயம் ரவியின் மாமியார் ஆன சுஜாதா தான் என கூறப்படுகிறது.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு இடையே குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வடித்ததாகவும் கூறப்படுகிறது.

மாமியார் முக்கிய காரணம்:

அதுவும் ஜெயம் ரவியின் மாமியார் கூட வந்த சண்டைதான் இந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக வெளிவரும் தகவல்கள் கூறுகிறது.

ஜெயம் ரவியின் மாமியார் பிரபல தயாரிப்பாளரான சுஜாதா என்பது குறிப்பிடதக்கது. இதில் சுஜாதா ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதில் சுஜாதா தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம் கொஞ்சம் ஓரளவுக்கு ஹிட் அடித்து இருந்தது.

அடுத்ததாக மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படத்தை தயாரிக்க சொல்லி இயக்குனர் ஒருவர் கதையை கொண்டு போய் சுஜாதாவிடம் கொடுத்திருக்கிறார்.

இந்த கதையை தனது மருமகனான ஜெயம் ரவியிடம் சுஜாதா கூற பின்னர் நடிக்க சம்மதம் வாங்கியிருக்கிறார் .

இதற்காக எவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள்? என கேட்டதற்கு ஜெயம் ரவி ரூ. 20 கோடி கேட்டிருக்கிறார். ரூ 20 கோடி கொடுக்க முடியாது என தயாரிப்பாளரும் மாமியாருமான சுஜாதா கூறியதை அடுத்து ஜெயம் ரவியை இந்த படத்தில் இருந்து தூக்கியிருக்கிறார்கள்.

விவாகரத்துக்கு விஜய் சேதுபதியும் காரணம்:

அதே நேரத்தில் அப்படத்தில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். சம்பள விஷயத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஜெயம் ரவியை விட விஜய் சேதுபதி இந்த கேரக்டருக்கு பக்காவாக இருப்பார் என்பதை வெளிப்படையாகவே ஜெயம் ரவியின் மாமியார் பேசியதாக கூறப்படுகிறது.

இங்குதான் பிரச்சனையே ஆரம்பித்திருக்கிறது. ரூ.20 கோடி பிரச்சனையால் தான் குடும்பத்தில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு அது கணவன் மனைவி சண்டை ஆகவே உருமாறி பின்னர் விவாகரத்து வரை சென்று விட்டதாக பிரபல பத்திரிகையாளரான பயில்வான் கூறியுள்ளார்.

மேலும் இவர்களின் விவாகரத்து குறித்து பல விதமதமான கதைகள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது

இதில் எது உண்மை எதில் பொய் என நம்ப முடியாத அளவுக்கு புது புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

எனவே இந்த விவாகரத்து செய்தி குறித்து ஜெயம் ரவியோ அல்லது அவரது மனைவி ஆர்த்தியோ தங்களது கருத்தை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவித்தால் தான் இதற்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version