தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் பேபி அஞ்சு. இவர் தமிழை தாண்டி மலையாள திரைப்படங்களின் நடித்த அங்கும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தார்.
முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறைக்கு நுழைந்தவர் அதன் பின்னர் மெல்ல மெல்ல படிப்படியாக திரைப்படங்களில் நடித்து ஹீரோயினாக வலம் வந்தார்.
அம்மா, அக்கா என குணசத்திர கதாபாத்திரங்களிலும் இவர் நடித்த புகழ் பெற்ற நடிகையாக இருந்து வந்திருக்கிறார் .
நடிகை பேபி அஞ்சு:
தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த பேபி அஞ்சு 1979 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டு வயதிலேயே உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் .
அதை எடுத்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக அவர் நடித்து வந்தார்.
தொடர்ந்து பூட்டாத பூக்கள் , பொல்லாதவன், சின்ன முள் பெரிய முள் , மீண்டும் கோகிலா, கர்ஜனை, பொய்சாட்சி, அழகிய கண்ணே, அன்புள்ள மலரே, ஊஞ்சலாடும் உறவுகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ஆயிரம் பூக்கள் மலரட்டும், முந்தானை சபதம், கேளடி கண்மணி, அக்னி பார்வை இப்படி பல திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பார்க்கப்பட்டு வந்தார்.
சினிமாவில் பீக்கில் இருந்தபோதே அவர் பருமனாக இருந்ததால் அவருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது .
17 வயதில் முதலிரவு:
இதனால் தன்னை விட 30 வயது மூத்த நடிகர் ஆன டைகர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை.
அஞ்சு 17 வயதாக இருக்கும்போதே திருமணம் நடந்தது. 17 வயதிலே திருமண உறவு என்பதில் அவருக்கு சரியான புரிதல் இல்லையாம்.
இதனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான கூடிய விரைவிலேயே பிரிந்து விட்டார்கள் . இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
மகனுக்காக தனியாக வாழ்ந்து வருகிறார். மகனை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக சினிமா பக்கமே தலை காட்டாதவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.
மேலும், தனக்கு ஏன் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறித்து பல விஷயங்களை மனம் திறந்து மிகுந்த வருத்தத்தோடு பேசி இருக்கிறார் .
அதைப்பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். ஆறிலிருந்து அறுபது வரை படத்தின் 100 நாள் விழாவுக்கு குடும்பத்துடன் நாங்கள் சென்றிருந்தோம் .
அப்போது என்னை பார்த்த மகேந்திரன் உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குழந்தையாக நடிக்க எங்களிடம் கேட்டார் .
கண்டீஷனா காசு கேட்டதே இல்ல:
அதுதான் என்னுடைய முதல் படம். நான் எந்த ஒரு நேரத்திலும் எந்த ஒரு காலத்திலும் இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நடிப்பேன், இந்த கேரக்டர் கொடுத்தாதான் நடிப்பின் என்று அடம்பிடித்ததே கிடையாது.
எது கொடுத்தாலும் அதில் சிறப்பாக என்னுடைய நடிப்பை வெளிப்படுத்துகின்றேன். ஆனாலும் என்னை ஒதுக்கினார்கள் .
என்ன காரணம் என்றே எனக்கு தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் குண்டாக இருப்பது தான் காரணம் எனக் கூறி வந்தார்கள் .
சினிமாவில் குஷ்பூவும் மீனாவும் குண்டாகத்தான் இருக்காங்க. அவங்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என நான் பலமுறை வேதனைப்பட்டு இருக்கிறேன்.
அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் வராமல் மலையாள சினிமா பக்கம் சென்று அங்கு நடிக்க ஆரம்பித்தேன். அங்கு நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள் .
குண்டா இருந்ததால் வாய்ப்பு தரல:
என்னுடைய உடல் பருமனை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் மலையாளத்தில் பல படங்களில் நடித்தேன்.
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நல்ல நடிகைகளே இல்லை என கூறுகிறார்கள்.ஆனால் அவர்கள் நல்ல நடிகைகளை அழைப்பது கிடையாது.
இப்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறேன் இதற்குப் பிறகு மீண்டும் என்னை திரையில் பார்க்கலாம் என அஞ்சும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.