நித்யா மேனன் உடம்பில் இந்த விஷயம்.. திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.. பிரபல நடிகர் பகீர்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

ஹீரோயின் என்றாலே மிகவும் ஒல்லியான தோற்றம், கவர்ச்சியான அழகு என இருப்பார்கள். ஆனால் இதற்கு சற்று மாறி விதிவிலக்காக இருப்பவர் தான் நடிகை நித்யாமேனன் .

நடிகை நித்யா மேனன்:

பருமனான தோற்றத்துடன் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது கதை எந்த அளவுக்கு இருக்கிறது? தனது கதையின் முக்கியத்துவத்தை அறிந்து நடித்து பிரபலமாக பார்க்கப்படுகிறார்.

இதுதான் இவரது நடிப்பின் திறமை என பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். முன்னதாக திரைப்படங்களில் நடிகையாக நடிப்பதற்கு எனக்கு விருப்பமே கிடையாது.

பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய லட்சியம் என அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

தமிழ் திரைப்படங்கள்:

இதனிடையே திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால் முதன்முதலில் தமிழில் 180 என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .

அதை எடுத்து வெப்பம் , உறுமி, ஓ காதல் கண்மணி , மெர்சல், இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ள திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக இதில் காஞ்சனா 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் மிகவும் புகழ்பெற்றார் .

அதையடுத்து அவருக்கு சைக்கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு , அம்மாவிடம் கோபமாக கெட்டவார்த்தையால் பேசும் அந்த ஒரு காட்சி எல்லோரது கவனத்தை ஈர்த்திருந்தது.

பாடி ஷேமிங்:

இதனிடையே தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அவரது தோழியாகவும் காதலியாகவும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நித்யா மேனன்.

36 வயதாகும் நித்தியாமேனன் பருமனான தோற்றத்துடன் இருந்தாலும் அதைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல் தொடர்ந்து தனது நடிப்பில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

பட வாய்ப்புகள் கிடைத்தால் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துக் கொடுப்பேன் மற்றபடி உடல் பருமனை பற்றியோ, பாடி ஷேமிங் பற்றியோ எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

திருமணத்திற்கு தடையாக இருப்பது இதுதான்:

இந்நிலையில் நித்தியா மேனன் 40 வயது கிட்டத்தட்ட ஆகும் வரை இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்று கூறி அதிர வைத்திருக்கிறார்.

 

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது நடிகை நித்தியா மேனன் திருமணம் செய்து கொள்ளாததற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது .

முதல் முதலாவதாக கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகமாக இருக்கிறது. இதனால் பல பிரபலங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறார்கள் .

இந்த விஷயத்திற்கு பயந்து தான் நித்தியா மேனன் திருமணமே வேண்டாம் என ஒதுக்கி வருகிறாராம் அத்துடன் இன்னொரு காரணம் என்னவென்றால், நடிகைகள் தங்களின் உடலை மெலிந்த தேகத்தில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஆனால் நித்யா மேனனுக்கு அப்படி இல்லை. அவரது உடல் எடை அதிகமாக இருப்பதால் தான் திருமணம் ஒரு தடையாக இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார் .

இவரின் இந்த பேட்டி நித்தியா மேனனின் ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மூக்கை நுழைப்பதையே வேலையாக வைத்திருக்கிறீர்கள் என பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version