ஜோதிகா சூர்யா வெடித்த பஞ்சாயத்து.. இனிமே இது சரிபட்டு வராது.. படத்திலிருந்து வெளியேறிய சூர்யா..!

தமிழ் சினிமாவில் 26 காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஜோதிகா.

மும்பை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவரது முதல் ஹிந்தி திரைப்படமே மாபெரும் தோல்வி படமாக அமைந்துவிட்டது.

இதனால் அவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் ஹிந்தியில் கிடைக்காமல் போனது. இவர் முதல் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடியுள்ளார்.

நடிகை ஜோதிகா:

மேலும், பல புரொடக்ஷன் கம்பெனிகளில் ஏறி இறங்கும்போது இவருடைய முதல் படத்தை பார்த்து விட்டு உங்களுடைய முதல் படமே தோல்வி அடைந்த படம்.

அதனால் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என முகத்திற்கு நேராகவே சொல்லியதால் அவருக்கு அங்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

ஜோதிகாவுக்கு மட்டும் இல்லை அந்த முதல் படத்தில் நடித்த நடித்த ஹீரோ, காமெடியன், ப்ரொடியூசர், இயக்குனர் , எப்படி யாருக்குமே திரைப்படங்கள் கிடைக்கவில்லையாம்.

இது வழக்கமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. முதல் படம் ஒருவருக்கு தோல்வி அடைந்து விட்டால் அதன் பிறகு அந்த படத்தையே எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வார்கள்.

இதனால் ஜோதிகா மிகுந்த விரக்தியில் இருந்தார். அந்த சமயத்தில் தான் அவர் தென்னிந்திய திரைப்படங்களில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.

தமிழ் சினிமா கொடுத்த மறுவாழ்வு:

தமிழ் சினிமாவில் வந்த புதிதிலே தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக ஹீரோயினாக அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவரது கதாபாத்திரத்திற்கு மிகவும் அழுத்தமான ரோலாக தேர்ந்தெடுத்து நடிக்க தமிழ் சினிமாவே அவரை கொண்டாட ஆரம்பித்தது.

இதனால் ஜோதிகாவுக்கு தமிழ் சினிமா மீது மிகுந்த நம்பிக்கை உருவானது. வட இந்திய சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் அந்த கோபத்தின் வெளிப்பாடாக தென்னிந்திய சினிமாவிற்கு வந்து இங்கு தொடர்ச்சியாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

கூடிய சீக்கிரத்தில் முன்னணி நட்சத்திர நடிகைகள் அந்தஸ்தை பிடித்தார் ஜோதிகா. அதன் பின் இங்கு நட்சத்திர நடிகையாக இருந்து வந்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட தமிழ் பெண்ணாகவே அவர் மாறிவிட்டார் ஒரு கட்டத்தில் பாலிவுட் சினிமாக்காரர்களும் ஜோதிகா ஒரு தென்னிந்தியப்பெண் என்ப நம்பி விட்டார்கள் .

மீண்டும் மும்பைவாசியாக ஜோதிகா:

மீண்டும் பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸாக தற்போது மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு மும்பைக்கு சென்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

தொடர்ச்சியாக அங்கு திரைப்படங்களில் நடித்து வரும் ஜோதிகா அங்கே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார் .

சூர்யா குழந்தைகள் என எல்லோரும் குடும்பத்தோடு செட்டில் ஆகியது மட்டுமில்லாமல் சூர்யா அங்கு சில பல தோள்களையும் சந்திக்க ஆரம்பித்து குட்டி தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் பாந்த்ராவில் மிகப்பெரிய பங்களா வீடு வாங்கி இருக்கிறார். இப்படியான சமயத்தில் தான் சுதா கொங்குரா சூர்யாவை வைத்து இயக்கவிருந்த புறநானூறு படத்திலிருந்து சூர்யா திடீரென விலகி இருக்கிறார்

புறநானுறு படத்தை நிராகரித்த சூர்யா:

இதற்கு முக்கிய காரணமே இந்தி எதிர்ப்பு தான் என கூறப்படுகிறது. புறநானூறு திரைப்படத்தில் ஹிந்தி எதிர்ப்பு குறித்தும் ஹிந்தி போராட்டங்கள் குறித்தும் பல வசனங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இடம் பெற்றிருந்ததாம்.

ஹிந்தி தெரியாது போடா என்ற வசனங்கள் மிகவும் அழுத்தமான கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாம். இது ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லையாம் .

இதனால் படத்தின் சில காட்சிகளையும் , வசனங்களையும் நீக்க சொல்லி ஜோதிகா கூறியிருக்கிறார் இதனால் சுதா கொங்குரா மிகுந்த கோவத்திற்கு உள்ளாகி விட்டாராம் .

கதை இயக்குவது நான் நீங்க மூன்றாவது மனுஷி. இதில் தேவை இல்லாமல் தலையிடவேண்டாம் என கேட்டதாகவும் அது மட்டும் இல்லாமல் சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ்களை தொடங்கி கிட்டத்தட்ட மும்பை வாசியாகவே மாறி வாழ்ந்து வருகிறார்.

இந்த ஒரு சமயத்தில் ஹிந்தி எதிர்ப்பு குறித்த படங்களில் நடித்து விட்டால் நம் அப்படியே நசுக்கப்பட்டு விடுவோம் என்ற காரணத்தால் புறநானூறு படத்திலிருந்து விலகி விட்டதாக செய்திகள் கூறுகிறது.

மட்டும் இல்லாமல் புறநானூறு படத்தின் கதையை சூர்யா மூன்றாவது இயக்குனர் ஒரு வருடம் சென்று சில கருத்துக்களை கேட்டிருக்கிறார் .

சூர்யா மீது கடுங்கோபத்தில் இயக்குனர்கள்:

இது சுதா கொங்குராவுக்கு தெரியவர அவர் மிகுந்த கோபத்தில் உச்சகட்டத்திற்கு சென்று சூர்யாவே வேண்டாம் என்னுடைய படத்தில் என அவரை நீக்கிவிட்டதாக செய்திகள் கூறுகிறது.

அதேபோன்றுதான் வாடிவாசல் படத்தையும் சூர்யா நிராகரித்திருக்கிறார். காரணம் அந்த திரைப்படத்தில் அமீர் நடிக்கிறார். சூர்யாவுக்கு இணையாக காட்சிகள் அமீருக்கு இருந்ததால் சூர்யா அமீரை எடுத்துவிட்டு வேறொரு நடிகரை போடுங்கள் என கேட்டுக்கொண்டாராம்..

ஆனால், வெற்றிமாறன் அதை காதில் கூட வாங்கவில்லையாம். முன்னதாக அமீர் மற்றும் சூர்யாவுக்கு பருத்திவீரன் திரைப்படத்தின் போது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version