தொகுப்பாளினி பிரியங்கா கணவரை பிரிய காரணமே இது தான்.. குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!

32 வயதாகும் விஜே பிரியங்கா தனது கணவரை பிரிந்து தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். அம்மா வீட்டில் அவர் வசித்து வருவதாக அவ்வப்போது அவர் வெளியிடும் வீடியோக்கள் மூலமாக தெரிய வரும்.

இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பெரும் புகழ்பெற்றவர் ஆக பார்க்கப்பட்டு வருகிறார்.

தொகுப்பாளினி பிரியங்கா:

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

கலகலப்பான பேச்சு எதார்த்தமான பேச்சு யாரையும் புண்படுத்தாத மனது உள்ளிட்டவற்றால் வெகுஜன மக்களை ரசிகர்களாக மாற்றிக் கொண்டார்.

தனது நெருங்கிய நண்பரான மாகாபா ஆனந்தின் சிபாரிசின் பேரில் தான் விஜய் டிவியில் தொலைக்காட்சியாக பணியாற்றும் வாய்ப்பே கிடைத்தது.

அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னதாக ஜீ தமிழ், சன் டிவி ,சுட்டி டிவி ,சன் மியூசிக் ,ஸ்டார் விஜய் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது லட்சியத்தையும் கனவையும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தார்.

தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள்:

அவர் தொகுத்து வழங்கிய பிரபலமான நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆப் காமெடி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட தொடர்களை சொல்லலாம்.

இதனடியை அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

தன்னுடைய பெயரை கெடுத்துக் கொள்ளப் போகிறார். அவப்பெயரை சம்பாதித்து விட்டு வெளியில் வரப் போகிறார் என பலரும் தங்களது கருத்துக்களை கூறினார்கள்.

ஆனால், பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு வழக்கம் போலவே மக்களின் மனதைக் கவர்ந்த போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

இதனிடையே பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்துக்கொண்டோமானால் அவர் தன்னுடன் பணியாற்றிய பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு கடந்த. 2016 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. பின்னர் ஒரு சில வருடத்திலேயே அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியது.

எந்த ஒரு இடத்திலும் தனது கணவரை குறித்து தனது கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிடாமல் இருந்ததே இதற்கு காரணமாக பார்க்கப்பட்டது.

விவாகரத்துக்கு காரணம் இதுதான்:

கணவர் பிரவீன் குமாரின் விவாகரத்திற்கு இதுதான் காரணம் எனக்கூறி பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் சமீபத்திய பேட்டியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

அதாவது, விஜே பிரியங்கா திருமணத்திற்கு முன்பு தன்னுடைய தாயார் வீட்டிலேயே வசித்து வந்தார். அவர் கணவர் வீட்டிற்கு செல்லவே இல்லை.

கணவரது குடும்பத்தாரையோ, கணவரியோ ஒரு பொருட்டாகவே பார்த்து கவனிக்கவில்லை. இதனால் அவரது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தன்னுடைய அம்மா, தம்பி , தம்பி மகள் உள்ளிட்டோரை கவனித்து வந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அதுவே இவர்களின் பிரிவுக்கு காரணமாகவும் அமைந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார் .

அவரின் இந்த கருத்து கிட்டத்தட்ட உண்மையாக இருக்கும் என நெட்டிசன் கூறி வருகிறார்கள் காரணம். பிரியங்கா தனது அம்மா வீட்டில் தான் முழு நேரமும் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version