SK இப்போ கவின்.. குறுகிய காலத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற காரணம் இது தான்..!

திறமைசாலிகளுக்கு விஜய் டிவியில் மிகப்பெரிய இடமும் பங்கும் உண்டு. திறமைசாலியான ஒரு இளைஞர் விஜய் டிவியின் வாசலில் வந்து வழுக்கி விழுந்தாலே அவரை உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் விஜய் டிவி.

அந்த லிஸ்டில் பல திறமை வாழ்ந்த இளம் கலைஞர்களை சொல்லலாம் குறிப்பாக சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பெற முக்கிய காரணமாக இருந்ததே விஜய் டிவி மட்டும் தான்.

திறனிசாலிகளை வளர்ந்துவிடும் விஜய் டிவி:

அதற்கு அடுத்த லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் கவின். முதன் முதலில் தொலைக்காட்சி நடிகராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் கவின்.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான அந்த தொடர் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

சீரியல் நடிகராக திரைத்துறையில் அறிமுகமானாலும் தொடர்ந்து தனது விடாமுயற்சியால் இன்று நட்சத்திர ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்து நிற்கிறார்.

தனது விடாமுயற்சியால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆர்வமும் ஆசையும் கனவும் லட்சியமும் கொண்டு 2017இல் சத்ரியன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

கவினின் அறிமுகப்படம்:

அதை எடுத்து 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.

அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரபல நடிகையான ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் அவர் விளையாடிய விதம் காமெடியாகவும் கலகலப்பாகவும் நண்பர்களோடு சேர்ந்து செய்த அரட்டை உள்ளிட்ட எல்லாமே மக்களை வெகுவாக கவர்ந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கவினுக்கு ஒரு மிகப்பெரிய பிளாட்பார்ம் ஆக அமைந்தது. அதிலிருந்து வெளிவந்த பிறகு அவசரப்பட்டு பட வாய்ப்புகளை தேர்ந்தெடுக்காமல் மிகவும் பொறுமையாக கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து நடிக்க ஆரம்பித்தார் கவின்.

டாடா படத்தின் மாபெரும் வெற்றி:

அப்படித்தான் அவரது நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை ஈட்டியது.

அந்த திரைப்படத்தின் காதல் கல்லூரி மாணவனாகவும், காதலனாகவும், கணவனாகவும், சிறந்த அப்பாவாகவும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த படம் கவினுக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாக பார்க்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர் லிப்ட் படத்தின் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை. ஆனாலும் ஓரளவுக்கு மக்களிடையே ரீச் அடைந்தது. ஆனால் தாதா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக அதை ரசிகர்கள் கொண்டாடித்தள்ளினர்.

அப்படம் வசூலிலும் பட்டய கிளப்பியது. இதனால் அவரது சம்பளமும் கிடுகிடுவென உயர்த்தி விட்டார். இதனுடைய சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஸ்டார் .

இந்த திரைப்படத்தில் சினமாவில் ஹீரோவாக துடிக்கும் ஒரு நடிகரின் வலியை அப்பட்டமாக காட்டி அவ்வளவு தத்துரூபாகமாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் நடிகர் கவின்.

ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்:

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் புகழ் பாராட்டப்பட்டதோடு அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்து அவரை கொண்டாடி தீத்து வருகிறார்கள்.

இதற்கான காரணம் என்ன? இவ்வளவு குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நடிகராக வளர்ந்து நிற்பதற்கான காரணம் என்ன? என யூகித்து பார்த்தோமானால்….

கவின் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நடிகராக வேண்டும் என்ற தனது லட்சியத்தோடு வந்து இத்தனை வருடங்கள் உழைத்து இந்த அளவுக்கு முன்னேறி வந்திருப்பது தான்.

குறுகிய காலத்தில் வளர்ச்சிக்கு இது தான் காரணம்:

அவர் சாதாரண குடும்பத்தில் பிறந்த நபர் என்பதால் ரசிகர்கள் அவர் மீது கரிசனம் காட்டி வருகிறார்கள்.

திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிப்பையும் யதார்த்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி பொதுவெளியில் அலட்டிக் கொள்ளாத எளிமையான குணம் கொண்டவராக இருப்பதால் தான் ரசிகர்களுக்கு கைவினை மிகவும் பிடித்து விட்டது.

அதனால் தான் கவினை இந்த அளவுக்கு தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகராக உயர்வதற்கு காரணம் அதுதான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version