கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!

1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. சினிமா பின்புலத்தைக் கொண்ட கனகாவிற்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே திரைதுறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

திரையில் கனகா:

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த கனகாவிற்கு இயக்குனர் கங்கை அமரன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் 400 நாட்கள் ஓடி வெற்றி கொடுத்ததால் கனகாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் துவங்கின.

ஆனால் ஒரு சமயத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன கனகா நிஜ வாழ்க்கையில் என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருந்தது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய கனகா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வாசித்து வந்தார்.

தனிமை வாழ்க்கை:

அவருக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வி பிரச்சனைகள் இருந்த காரணத்தினால் தனிமையில் வாழ்ந்து வந்தார் கனகா. அவருடைய வீடு கூட பல ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் இன்றி பாழடைந்து போய் தான் இருந்தது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கனகாவிற்கு உதவியாளராக ஒருவர் மட்டுமே இருந்ததாகவும் அவர்தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் குட்டி பத்மினி தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

ரகசிய கல்யாணம்:

அதில் அவர் கனகாவுடன் சேர்ந்து அந்த புகைப்படத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. அதை பதிவிட்ட குட்டி பத்மினி அன்புக்குரிய சகோதரியான கனகாவை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி என்று போட்டிருந்தார் அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கனகாவை சந்தித்துள்ளனர்.

அப்போது பயில்வான் ரங்கநாதனும் கூட அவரை சந்திக்க சென்றிருந்தார். உண்மையில் கனகாவின் தாயான தேவிகா செய்த தவறின் காரணமாகதான் கனகா இப்படியான தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

நடிகை தேவிகா என் டி ராமாராவுடன் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படியே நடித்துக் கொண்டிருக்கும் பொழுது என் டி ராமாராவுக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அதற்காக அவர் ஜோசியரிடம் சென்ற பொழுது குறிப்பிட்ட ஒரு ராசியை கூறி அந்த ராசி நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் முதலமைச்சராகலாம் என்று ஜோசியர் சொன்னதை அடுத்து அப்படியான பெண்ணை தேடி வந்தார்.

வாழ்க்கை பிரச்சனை:

அந்த சமயத்தில் தேவிகா தன்னுடைய மகள் கனகா அந்த நட்சத்திரம் ராசி கொண்டவர் தான் என்று கூறி என்டிஆருடன் பேருக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்திருக்கின்றனர்.

அதற்காக என்.டி.ஆர் பெரும் தொகையை கொடுத்திருக்கிறார் அதன் பிறகு அவரை மனைவி என்றெல்லாம் என்.டி.ஆர் எந்த உரிமையும் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த திருமணமே திருட்டுத்தனமாக நடந்ததாக ஒரு பேச்சு உண்டு.

அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட கனகா வெகு நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார். அதன் பிறகு அமெரிக்காவை சேர்ந்த முத்துக்குமார் என்னும் ஒருவரை அவர் காதலித்து வந்ததாகவும் கடைசியில் அவரும் கைவிட்டு சென்ற காரணத்தினால்தான் அவர் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version