நடிகைகள் இந்த விஷயத்தை மறைக்க காரணம் இது தான்.. ஓப்பனாக பேசிய நடிகை ஓவியா..!

கமலஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை ஓவியா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகினார்கள். அதுமட்டுமல்லாமல் முதன் முதலில் ஓவியாவுக்கு தான் ஆர்மிஸ் உருவாகினார்.

நடிகை ஓவியா:

அந்த அளவுக்கு ஓவியாவின் எதார்த்தமான நடவடிக்கைகளும், நேர்மையான பேச்சும் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது.

இவரது குணத்தை பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனாலே இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஜூலி ஓவியா விஷயத்தில் மிக மோசமான நடந்துக்கொண்டார்.

இதனால் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருந்தாலும் முன்னதாக இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓரளவுக்கு தனக்கான ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டு அடையாளத்தோடு இருந்து வந்த நடிகையாக தான் பார்க்கப்பட்டார்.

ஓவியாவின் முதல் திரைப்படம்:

2010 ஆம் ஆண்டு ஓவியா நடிப்பில் வெளிவந்த களவாணி திரைப்படம் தான் இவர் நடித்த முதல் திரைப்படம். முதல் திரைப்படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் ஓவியா.

முன்னதாக அவர் மாடல் அழகியாக இருந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார் .

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட ஓவியா கேரளா நடிகைகளை போன்று பார்ப்பதற்கு பவ்யமான அழகோடும் தோற்றத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஓவியா பெரிதாக சினிமா பின்பலம் ஏதும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியின் மூலமாக இன்று இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

தமிழ் படங்கள்:

மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஓவியா தமிழில் களவாணி படத்தை தொடர்ந்து மன்மத அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம் , மதயானை கூட்டம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

தற்ப்போது ஓவியாவுக்கு 33 வயது ஆகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஓவியாவிடம் தொகுப்பாளர்…

ஓவியா தன்னுடைய வயதை குறைத்து எப்போதாவது பொய் சொல்லி இருக்காங்களா? என கேள்வி கேட்டதற்கு… இல்லை நான் எங்குமே அதைப் பற்றி பொய் சொன்னது கிடையாது.

நடிகைகள் வயதை மறைக்க இதுதான் கரணம்

எனக்கு இப்போ 32 வயசு ஆகுது அதை நினைத்து நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் ஆக உணர்கிறேன். வயசு என்பது மிகவும் அற்புதமானது.

ஒவ்வொரு வயசிலும் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் ஒவ்வொரு அனுபவங்களை கற்றுக்கொள்கிறோம். ஐந்து வருடத்திற்கு முன்பு இருந்த ஓவியாவாக நான் இப்போது இல்லை.

இப்போது வேறு மாதிரி பல விஷயங்களை கற்றுக்கொண்டு தெரிந்து கொண்டிருக்கிறேன். எனவே வயசு என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது.

நிறைய நடிகைகள் வயசு பற்றி உண்மையை கூற ஏன் யோசிக்கிறார்கள் என கேட்டதற்கு… அது ஏன் என்றே தெரியல… உண்மையான வயதை சொல்ல ஏன் யோசிக்கணும்?

அது ஒரு ஆசிர்வாதம் தானே நம்ம இவ்வளவு நாள் உயிரோடு இருக்கிறதே கடவுள் கொடுத்த கிப்ட் தானே.? மற்ற நடிகைகைகள் வயதை வெளிப்படையாக செய்வதன் மூலம் Insecure ஆக பீல் பண்றாங்க போல.

உண்மையான வயதை சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்களோ? இந்த சமூகம் வயசானவளாக நம்மை சித்தரித்து விடும் என்று பயப்படுகிறார்கள்.

அதனால் தான் பல நடிகைகள் தங்களின் உண்மையான வயதை வெளியில் சொல்வதில்லை. ஆனால், எனக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை என ஓவியா மிகவும் போல்டாக பதில் அளித்திருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version