நான் சினிமாவில் நடிக்காமல் போனதுக்கு காரணமே இந்த சம்பவம் தான்..! ரசிகர்களை கலங்க வைத்த ஆல்யா மானசா..!

பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

2017 ஆம் ஆண்டு வெளியான இந்த சீரியலில் அவர் செம்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆலியா மானசா:

அதே சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் சஞ்சீவ். இவர்கள் இருவரும் சீரியலில் ஒன்றாக நடித்த போதே அந்த கெமிஸ்ட்ரி ரியலாக இருந்ததாம் .

ஆம் அவர்கள் உண்மையிலே காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே ஆல்யாவுக்கு ஐலா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த கேப்பில் சில வருடங்கள் சிறையில் நடிக்காமல் இருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறப்பால் உடல் எடை கூடிப்போனதால் மீண்டும் ஜிம் ஒர்க் அவுட் செய்து தனது உடலை ஒல்லியாக கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டார்.

மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார். தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி சீரியல்களில் நடித்து வந்த ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகிய இனியா என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரிஷி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இல்லத்தரசிகளின் கவனம் வைத்த சீரியல் ஆக பார்க்கப்பட்டு வருகிறது.

பணக்கஷ்டம்… அந்த தொழில் செய்தேன்:

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் நடிகையாகும் அதிக சம்பளம் வாங்கும் சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வரும் ஆலியா மானசா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா கனவு காணாமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார்.

மேலும், வாழ்க்கையில் நடந்த மிக சோகமான விஷயங்களையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். “நான் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் எங்களுடைய ஆரம்ப வாழ்க்கை வாழ்ந்து வந்தோம்.

அந்த சமயத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என வருமானத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்ட சமயத்தில் படத்தில் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தேன்.

அந்த சமயத்தில் சினிமா வாய்ப்புகள் கூட தேட ஆரம்பித்தேன். அப்போது அதனால் நான் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன்.

தொடர்ந்து ஆடிஷனுக்கு சென்று கொண்டே இருப்பேன். சில நேரம் அவர்களே என்னை வேண்டாம் எனக் கூறி அனுப்பி விடுவார்கள்.

சினிமா கனவு அழிந்துபோனது:

அந்த நேரத்தில் நான் பொருளாதார ரீதியாகவும் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். இதனால் வேறு வழி இல்லாமல் சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டு ஜிம் ட்ரைனர் ஆகவும் குழந்தைகளுக்கு நடனம் சொல்லித் தரும் நடன டீச்சராகவும் இருந்து வந்தேன்.

மேலும் குரூப்பில் நடனமாடுவது போன்ற வேலைகளை பார்த்து சின்ன சின்ன வருமானத்தை சம்பாதித்து வந்தேன் .

இன்னொரு பக்கம் சினிமாவில் முயற்சித்துக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் எனக்கு சின்னத்திரையில் வாய்ப்பு வந்தது .

ஆனால் அதை தட்டி கழித்து விட்டால் அந்த நேரம் எனக்கு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாவேன்.

அப்பாவுக்கு கேன்சர் நோய்:

அது மட்டும் இல்லாமல் என்னுடைய அப்பா அந்த நேரத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் சீரியல் வேண்டாம் சினிமா தான் வேண்டும் என அடம் பிடித்து வாய்ப்பு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.

அதனால் சீரியல் நடிகையாகவே எனது வாழ்க்கையை துவங்கி விட்டேன். இப்போது நான் சீரியல் நடிகையானதை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நான் சினிமா நடிகையாக இருந்திருந்தால் தீபாவளி, பொங்கல், போன்ற தினங்களில் மட்டும் தான் மக்கள் என்னை தேடி வந்து பார்த்து நினைவுப்படுத்தி இருப்பார்கள்.

இப்போது தினமும் என்னை தொலைக்காட்சி வாயிலாக பார்ப்பதால் நான் இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலமானவராக இருக்கிறேன். இதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது என ஆலியா மானசா கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version