இது ரொம்ப முக்கியம்.. ரிலேஷன்ஷிப்பில் நடந்த பெரிய தப்பு… ரகசியம் உடைத்த கௌதமி..!

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பலம் வந்து கொண்டுவந்தவர் தான் நடிகை கௌதமி.

குறிப்பாக இவர் ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தினார். அந்த சமயத்தில் இவர் தெலுங்கு தமிழ் ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களின் நடித்திருக்கிறார்.

நடிகை கௌதமி:

திரைப்பட நடிகையாகவும் , தொகுப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் தொலைக்காட்சி நடுவராகவும் பல துறைகளில் தனது திறமை சிறப்பித்து காட்டியிருக்கிறார் .

நடிகை கௌதமி இவர் முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார்.

அதை எடுத்து பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய வச்சா, ருத்ரா, தேவர் மகன் நம்மவர் உள்ளிட்ட பல சிறப்பாக சிறப்பான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே நடிகை கௌதமி 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது.

முதல் திருமணம் விவாகரத்து:

இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு குழந்தை 1999 ஆம் ஆண்டு பிறந்தது. அதே ஆண்டில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் கௌதமி.

அதன் பிறகு சில வருடம் தனியாக வாழ்ந்து வந்த அவர் நடிகர் கமல்ஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ ஆரம்பித்தார்.

திருமணம் செய்யாமலே அவருடன் குடும்பம் நடத்தி வந்தார் கௌதமி என பெரும் சர்ச்சையை சந்தித்து வந்தார்.

ஆனால், அது எல்லாம் மனதில் போட்டுக்கொள்ளாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த கௌதமி திடீரென நடிகர் கமல்ஹாசனை பிரிந்துவிட்டார்.

அதற்கான காரணம் தனது மகளுக்கு பாதுகாப்பில்லை எனை கூறி பிரிந்ததால் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அது பார்க்கப்பட்டது .

கமல் ஹாசனை பிரிய காரணம் இதுதான்:

இந்நிலையில் தற்போது நடிகை கௌதமி. தன்னுடைய ரிலேஷன்ஷிப்பில் நடந்த மிகப்பெரிய தப்பு இதுதான் என பேட்டி ஒன்றில் பல விஷயங்களை ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது, நீங்கள் ஒரு உறவிலிருந்து அந்த உறவு சரிவர ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால் அதோட முழு பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

உங்களுடைய அப்பா , அம்மா, கணவர், மகன், காதலன், இப்படி எந்தவிதமான உறவாக இருந்தாலும் சரி அந்த உறவில் இருவருக்கும் இடையே ஒரு மையப் புள்ளி இருக்கிறது.

அந்த மையப்புள்ளியை இருவரும் தான் சேர்ந்தே கடந்து வர வேண்டும். ஒரு கட்டத்தில் அந்த மையப்புள்ளியில் நீங்கள் மட்டும் சென்று கொண்டே இருக்கிறீர்கள்.

எதிர் தரப்பில் இருப்பவர்கள் வரவே இல்லை என்றால் நீங்கள் பின்னாடி திரும்பி பார்த்து மறுபடியும் எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு முன்னோக்கி சென்று அவர்களுடனே பயணிப்பீர்கள்.

அப்படி செய்யும்போது அவர்கள் நீ எனக்காக இவ்வளவு பயணித்து வருகிறாயா? எனக்காக இவ்வளவு துன்பங்களை தாங்கிக் கொள்கிறாயா? என ஆரம்பத்தில் நினைத்து உங்களிடம் அன்பாக பழகுவார்கள் .

ஆனால் நாளடைவில் அது அப்படியே பழகிவிடும். அவர்கள் அந்த மையப் புள்ளியில் உங்களுக்கு ஈடாக வர யோசிப்பார்கள்.

நீ எப்படியும் கஷ்டப்பட்டு வந்துருவ என்று அலட்சியமாக உறவில் இருக்கும் போது தான் இந்த உறவு விரிசல். ஏற்படுகிறது.

ரகசியம் உடைத்த கௌதமி:

அன்பு பரிமாற்றம் என்பது இருவருக்குள்ளேயும் இருக்க வேண்டும். அந்த மையப்புள்ளி இருவரும் சேர்ந்தே கடக்க வேண்டும் அதுதான் ஹெல்தியான ரிலேஷன்ஷிப்.

இருவருக்கும் இடையிலான அந்த அன்பு அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த உறவும் நீடிக்கும்.

நீங்கள் 50 சதவீதத்தை கடக்கும்போது எதிர் தரப்பில் இருப்பவர்கள் நீங்கள் செய்யும் தியாகங்களை வாங்கி பழகி விடுவார்கள்.

அது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு பழகிப்போகி உங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்பது என்ன தெரிய வரும் போது நீங்கள் அவரிடம் இருந்து பிரிந்து விடுவது நல்லது. இதுதான் என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம் என கௌதமி கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version