தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை நிதி அகர்வால் ஆரம்பத்தில் இருந்து திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார்.
இருந்தாலும் இவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில வணிகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
நடிகை நிதி அகர்வால்:
இது தனது பெற்றோர்களின் ஆசைக்காக செய்தது. திரைப்படங்களில் நடிக்க ஆசை வந்ததும் கல்லூரி படிக்கும் போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முறையாக நடனத்தை கற்றுத் தெரிந்து கொண்டார்.
நிதி அகர்வால் சிறந்த நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த டான்ஸர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
இவர் பலே, கதக் மற்றும் இடை ஆட்டம் ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்ற நடன கலைஞராக இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.
இவரின் கவர்ச்சி அழகு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் நிதி அகர்வால்.
முதன் முதலில் சவ்யசாச்சி என்ற திரைப்படத்தில் நடித்து 2017 ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் .
சிம்புவுடன் திருமணம்:
அதை அடுத்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார் .
இரண்டாவது படமே சிம்புவுடன் நடித்த போது அந்த திரைப்படத்தால் நிதி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .
அது மட்டும் இல்லாமல் அப்படத்தில் சிம்புவுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் ரொமான்டிக் காட்சிகளின் நடித்து வந்ததால் சிம்புவை காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூட செய்திகள் வெளியாகிய பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
பின்னர் இந்த வதந்தி செய்திகளுக்கு பதிலடி கொடுத்த நடிகை நிதி அகர்வால் வெளியாகும் தகவல்களில் சிலது பொய்யான தகவல்களும் உள்ளது. சிலது உண்மையான தகவல்களும் இருக்கிறது.
இதில் எது பொய் எது வதந்தி என தனது பெற்றோர்களுக்கு தெரிந்து விட்டால் அதுவே போதும் என தெளிவான விளக்கத்தோடு முற்றுப்புள்ளி வைத்தார் .
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை நிதியாகர்வால்.
இந்நிலையில் சமீபத்தில் ஆணுறை குறித்த விளம்பரம் ஒன்றில் நடித்து அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகப் பெரிய சர்ச்சைக்கு உள்ளான நடிகையாக பேசப்பட்டு வருகிறார்.
ஆணுறை இன்பமான உறவு கொடுக்கும்:
ஆம் சமீபத்தில் நடிகை நிதி அகர்வால் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் அதில். ஆணுறை உபயோகிப்பதால் பெண்கள் உச்ச நிலையில் திருப்தி அடையலாம் என்றும் கூறியுள்ளார்.
பெண் மற்றும் ஆண் இருவருக்குமே உடலுறவில் பிரச்சனையில்லாமல் இன்பமாக அனுபவிக்க ஆணுறை மிக அவசியம் என்பதை விளக்கத்தோடு கூறியுள்ளார்.
நிதி அகர்வாலின் இந்த விளம்பர பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று மிகவும் மோசமாக அவரை விமர்சித்திருந்தார்கள்.
மேலும், ஆணுறை என்பது அவ்வளவு மோசமான தயாரிப்பு இல்லை. இதை அரசாங்கமே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயமாக பார்த்து வருகிறது.
எனவே இதை கொச்சையாக நினைக்க வேண்டாம் என நிதி அகர்வாலின் இந்த விளம்பரத்திற்கு அவரது ரசிகர்கள் சில பேர் ஆறுதலான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.