குழந்தைகளுக்கு ஆபத்து.. இதனால தான் ராமராஜனை பிரிந்தேன்.. நளினி கூறிய பகீர் காரணம்..!

80ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை நளினி இவர் தமிழை தவிர மலையாளத்திலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சென்னை பூர்வீகமாகக் கொண்ட இவர் தயாரிப்பாளர், நடிகை ,நகைச்சுவை நடிகை இப்படி பல பரிமாணங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

நடிகை நளினி:

இவர் தமிழில் சரத்குமார், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.

அதேபோல் மலையாள நடிகர் ஆன மோகன்லால் மம்முட்டி உள்ளிட்டவருடன் பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நளினி 1987 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருந்து வந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதலில் ராமராஜன் தான் நளினியிடம் வந்து தனது காதலை கூறியிருக்கிறார். பின்னர் இவர்கள் இருவரும் காதலிப்பது நளினி வீட்டுக்கு தெரிய நளினி வீட்டார் அதை எதிர்த்திருக்கின்றார்.

ராமராஜனுடன் ரகசிய திருமணம்:

ஆனால் நளினிக்கு ராமராஜன் மீது அதிக காதல் இருந்ததால் பெற்றோரை எதிர்த்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர் . திருமணமாகி குழந்தை பிறப்புக்கு பிறகும் கணவன் மனைவியாக மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இவர்களின் விவாகரத்துக்கான காரணம் இதுவரை பொதுவெளியில் வெளிப்படையாக கூறியதே கிடையாது மேலும் , விவாகரத்து பெற்ற பிறகும் நளினி பல பேட்டிகளில் தன்னுடைய கணவரை மிகுந்த மரியாதையோடு பேசுவார்.

இன்னும் தனக்கு காதல் இருப்பதாகவும் இன்னொரு ஜென்மம் என்று இருந்தால் கூட எனக்கு ராமராஜன் தான் கணவனாக வேண்டும் என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

விவாகரத்துக்கு காரணம் இது தான்:

இவ்வளவு காதலோடு இருக்கும் இந்த ஜோடி ஏன் பிரிந்தார்கள் இவர்கள் பிரிவதற்கு என்ன காரணம் என ரசிகர்களை வியந்து போகும் அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையோடும் காதலோடும் இருந்து வருகிறார்கள் .

அவ்வளவு ஏன் மகள் அருணா மற்றும் அருண் ஆகியோரின் திருமணங்களில் கூட ராமராஜன் வந்து தான் திருமணம் நடத்தி வைத்தார் .

அந்த அளவுக்கு மிகுந்த மரியாதையோடு இவர்கள் இருந்து வருகிறார்கள். இதுவரை அவர்களின் விவாகரத்துக்கான காரணம் பொதுவெளியில் எங்கும் பேசாமல் இருந்து வந்தார் நளினி.

தற்போது முதன்முறையாக ரகசிய உண்மையை உடைத்திருக்கிறார். ஆம் தனக்கும் தன் கணவருக்கும் ஏன் விவாகரத்து ஆனது என்பது பற்றிய உண்மை முதன்முறையாக கூறியிருக்கிறார் .

அதாவது எங்களுடைய பிரிவுக்கு காரணம் எங்கள் ஜாதகம் தான். எங்களுக்குள் நேரம் சரியில்லை என்பதால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்.

மேலும் நாங்கள் பிரிந்து இருந்தால் தான் எங்களுக்கும் நல்லது மேலும் பிள்ளைகள் பிறந்து தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்று ஜாதகத்தில் கூறப்பட்ட காரணத்தால் தான் நாங்கள் இருவரும் முறையாக பேசி பிரிந்து விட்டோம்.

7 ஜென்மம் எடுத்தாலும் அவர் தான் என் புருஷன்:

அவருக்கு ஜாதகம் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது. எவ்வளவு என்றால் நான் இப்போது என்ன நினைக்கிறேன் என்று கூட அவருக்கு தெரிந்துவிடும்.

அந்த அளவுக்கு அவர் ஜாதகம் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். 7 ஜென்மம் எடுத்தாலும் எனக்கு அவர் தான் கணவராக வேண்டும்.

நாங்கள் பிரிந்தாலும் எங்களுடைய காதல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல நல்ல விஷயங்களில் நாங்கள் கைகோர்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என நளினி அந்த பேட்டியில் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version