இதனால் தான் ஜெயம் ரவி போட்டோ எல்லாத்தையும் DELETE பண்ணேன்..! வாய் திறந்த ஆர்த்தி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய தனி திறமை மூலமாக சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொண்டார் .

இவரது தந்தையான மோகன் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றி பிரபலமான எடிட்டராக வலம் வந்தவர் .

நடிகர் ஜெயம் ரவி:

இவரது அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனராக இருப்பவர். இப்படி தனது தந்தை மற்றும் அண்ணனின் உதவியுடன் சினிமா துறையில் அறிமுகமானார் .

தன்னுடைய அண்ணன் முதன் முதலில் இவரை வைத்து இயக்கிய திரைப்படம் தான் ஜெயம். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்று அடையாளத்தோடு மாறிவிட்டது.

தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

இப்போது 43 வயதாகும் நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் ஜெயம் ரவி .

காதல் திருமணம்:

அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜெயம் ரவி இதனிடையே ஆர்த்தி ரவி என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

ஆர்த்தி ரவி பிரபல தயாரிப்பாளரான சுஜாதா என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவிக்கு ஆரவ் , அயான் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

குழந்தை குடும்பம் என மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென விவாகரத்து செய்யப் போவதாக தகவல் ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவையே பேர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இது குறித்த அவ்வப்போது அடுத்த அடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனிடையே ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட அத்தனை புகைப்படங்களையும் நீக்கிவிட்டார் .

விவாகரத்து செய்தி:

இதனால் இவர்களின் விவாகரத்து உண்மைதான் போல என செய்திகள் வெளியாகி மேலும் தீயாக பரவத் தொடங்கியது.

இந்நிலையில் ஆர்த்தி ரவியிடம் ரசிகர் ஒருவர்… ஏன் நீங்கள் கணவர் ஜெயம் ரவியுடன் எடுத்துக் கொண்ட எல்லா போட்டோவையும் டெலிட் செய்தீர்கள் என கேட்டதற்கு….

அதாவது, என்னுடைய சில ரகசியமான விஷயங்கள் அது ரகசியமாகவே இருக்கட்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

என்னுடைய கணவரோ அல்லது என்னுடைய குழந்தைகளையோ அல்லது எனக்கு சொந்தமான விஷயங்களை பொதுவெளியில் காட்டுவதற்கு நான் விரும்பவில்லை.

என்னுடைய ப்ரொபைலை பார்க்கும்போது அது என்னுடைய சம்பந்தமான விஷயங்கள் மட்டும் மற்றும் என்னுடைய புகைப்படங்கள் மட்டும் இருந்தாலே போதும் என நான் நினைக்கிறேன் .

அது என்னுடைய கணவரையும் என்னுடைய குழந்தைகளையோ பாதிக்காத வகையில் நான் அதை ரகசியமாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

புகைப்படங்களை நீக்கியது குறித்து ஆர்த்தி:

அது என்னுடைய பர்சனல் என்னுடைய பிரைவசி. இதில் ஒரு குறிப்பிட்ட தக்க விஷயம் என்னவென்றால் ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ஜெயம் ரவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டுமே டெலீட் செய்துள்ளார்.

இது தவிர அவரது ப்ரொபைலில் ‘ஆர்த்தி ரவி’ என்ற பெயரை டெலீட் செய்யவே இல்லை. அதேபோல் ஜெயம் ரவியின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஆர்த்தி ரவியின் புகைப்படங்களை நீக்கவே இல்லை.

எனவே இதன் மூலம் அவர்களின் விவாகரத்து உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இதன் மூலமாக ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி இருவருமே தங்களை குறித்து வெளிவந்த விவாகரத்து வதந்திகளுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version