இதனால் தான் என்னோட முகம் மாறிடுச்சு.. அதுல்யா ரவி சொல்றத நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்..!

கோயம்புத்தூரை சேர்ந்த அழகு பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலகட்டத்திலே ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர் தான் அதுல்யா ரவி.

குறிப்பாக இவருக்கு இளசுகள் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வந்தது. அறிமுகமான புதிதில் குறும்படங்களில் நடித்து வந்த போது இவருக்கு டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.

நடிகை அதுல்யா ரவி:

ஆம், முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அதுல்யா ரவி .

முதல் படத்திலிருந்து ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பு பெற்ற அதுல்யா ரவிக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

குறிப்பாக இவரது க்யூட்டான தோற்றமும் பவ்யமான அழகும் தான் எல்லோரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அதன் பிறகு ஏமாளி, நாடோடிகள், உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு பெயர் சொல்லும்படி அமையாமல் போய்விட்டது. ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு தொடர்ச்சியாக கிடைக்காதுதால் ஏமாற்றம் அடைந்தார் அதுல்யா ரவி.

கவர்ச்சி ஆயுதம்:

எப்படியாவது கிடைத்த மார்க்கெட்டை விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும் தொடர்ந்து முன்னணி நடிகை. என்ற இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் கவர்ச்சியான புகைப்படங்களையும் கவர்ச்சியான ரோல்களிலும் நடிக்க தயக்கம் காட்டாமல் இருந்து வந்தார்.

இப்படியாக அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முருங்கைக்காய் சிப்ஸ் . இந்த திரைப்படத்தில் மோசமான காட்சியில் அதுல்யா ரவி நடித்து முகம் சுளிக்க வைத்து விட்டார் .

இதனிடையே நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தன்னை கவர்ச்சியாக மாற்றிக் கொண்டும் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

சமூகவலைதளங்களில் கூட படு கிளாமரான போட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடத் துவங்கினார்.

முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி:

இதனால் அதுல்யா ரவியா இது? என ரசிகர்கள் பார்த்து அவரை விமர்சிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டார்.

இருந்தாலும் அவருக்கு பெரிதாக தொடர்ந்து வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து அவரது முகத்தோற்றமும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வேறு ஒரு தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

இதனால் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய அழகை மாற்றிக் கொண்டதாக நெடிசன்ஸ் பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அதுல்யா ரவியிடம் உங்களுடைய முக அழகு மாறிவிட்டது. இதற்கு காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி என்று பலரும் கூறுகிறார்கள். இதற்கு உங்களுடைய பதில் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ரவி, பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் நான் செய்து கொள்ளவில்லை. நான் வழக்கமாக உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தவறாமல் செய்வேன்.

அதன் காரணமாகத்தான் என்னுடைய முக அழகு மாறிவிட்டது என கூறியிருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள், நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version