இதனால் தான் வடக்கு நடிகைகளை ஹீரோயின் ஆக்குகிறார்கள்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி பெருமளவில் புகழ் பெற்றுள்ளது.

குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இயக்கி பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது.

அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படத்தை இயக்கும் கம்பெனியாக ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இருந்து வந்தது.

சிவாஜியை அறிமுகம் செய்த AVM ஸ்டூடியோ:

இந்திய சினிமா அளவில் பழம்பெரும் பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக இருந்து வந்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை ஏ எம் சரவணன் மற்றும் அவரது குகன் நடத்தி வந்தனர்.

சென்னை வடபழனியில் இருந்து வந்த இந்த ஸ்டுடியோவில் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்கள் தயாரித்திருந்தார்கள்.

கமல்ஹாசன் , சிவாஜி கணேசன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை ஏவிஎம் ஸ்டுடியோக்கு இருக்கிறது.

இந்த அளவுக்கு பெரும் புகழ்பெற்று சிறந்து விளங்கி வந்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிக பட்ஜெட்டுகளில் திரைப்படங்களை எடுத்து பெரும் நஷ்டம் அடைந்தது .

இதனால் அதிக பொருட்செலவில் படங்களை எடுக்கக்கூடாது என்ற ஒரு முடிவு எடுத்து குறைவான பட்ஜெட்டில் படங்களை எடுக்க ஆரம்பித்தார்கள் .

பெரிய பட்ஜெட் படங்களால் பெரும் நட்ஷம்:

பின்னர் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் படங்களை எடுப்பதை கைவிட்டு விட்டார்கள் இந்த தயாரிப்பு நிறுவனம்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் இடைவிடாமல் உழைத்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி பல மொழிகளில் புகழ்பெற்று சிறந்து விளங்கிவந்த ஏ வி எம் ஸ்டுடியோஸ் தற்போது அடையாளமே இல்லாமல் அழிந்து போனது.

இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் ஏவிஎம் குமரன் திரைப்படத்துறையில் நடக்கும் பல அவலங்களை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு கூத்து நடக்கிறது. இது மிகவும் தவறான விஷயமாக என நாங்கள் எடுத்துச் சொல்லியும் யாரும் இதுவரை கேட்டதில்லை .

வடநாட்டு நடிகைகளுடன் கூத்து:

அதாவது தென்னிந்திய ஹீரோயின்களை நடிக்க வைத்தால் பரவாயில்லை. ஆனால். மொழியே தெரியாத வட இந்திய நடிகைகளை அழைத்து வந்து ஹீரோக்கள் செய்யும் அட்ராசிட்டிகள் மிகவும் மோசம் .

அவர்களுடன் நேரத்தை செலவிட்டு ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்களைப் போன்ற தயாரிப்பாளர்களின் தலையில் மண்ணை அள்ளி போட்டு விடுகிறார்கள்.

நான் பல்வேறு ஹிந்தி திரைப்படங்களை ரீமேக் செய்திருக்கிறேன். ஆனால் எம்ஜிஆர், சிவாஜி,நாகேஷ் போன்ற நடிகர்களின் படங்களில் தங்களால் நடிக்கவே முடியாது என ஹிந்தி நடிகர்கள் திணறிப் போய் இருக்கிறார்கள் .

MGR, சிவாஜியை பார்த்து பயந்த வடகன்ஸ்;

அப்படித்தான் எம்ஜிஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தை நான் ரீமேக் செய்த போது “நான் ஆணையிட்டால்” பாடலில் படத்தின் ஹீரோ என்னால் நடிக்க முடியாது… அந்த பாடலே வேண்டாம் என கூறி விட்டார்.

அதேபோல் சிவாஜி நடிப்பில் வெளிவந்த உயர்ந்த மனிதன், பாபு போன்ற திரைப்படங்களில் என்னால் நடிக்கவே முடியாது என அதன் ரீமேக்கில் ஹிந்தி நடிகர்கள் நடிக்க பாய்ந்தார்கள் .

அந்த அளவுக்கு நம்மிடம் மிகச் சிறந்த திறமையான நடிகர்கள் இருந்தார்கள். ஆனால் காலங்கள் செல்ல செல்ல அப்படியே அது மாறிவிட்டது.

நடிகர்கள் பெரும்பாலும் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு வடநாட்டு நடிகைகளை இங்கு கொண்டு வந்து அவர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முன் வந்தார்கள்.

இயக்குனர்களும் எப்படி படத்தை எடுக்கிறார்களே என்றே தெரியவில்லை. படம் ஏதோ ஒரு மூலையில் ஆரம்பத்தில் ஏதோ ஒரு மூலையில் முடிந்து விடுகிறது .

வெள்ளை தோலுக்கு ஹீரோக்கள் ஆசை:

குறிப்பாக ஹீரோக்கள் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு பாம்பே நடிகைகளை அழைத்து வந்து நடிக்கவே தெரியாத… தமிழ் பேசவே தெரியாதவர்களை நடிக்க வைத்து படத்திற்கு பெரும் நஷ்டத்தை கொடுத்து விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட நடிகைகளுக்கு தங்களுடைய குரல் மூலம் உயிரை கொடுக்க முயற்சிக்கிறார்கள் டப்பிங் கலைஞர்கள் .

இப்படித்தான் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என ஏவிஎம் குமரன் அந்த பேட்டியில் மிகவும் காட்டமாக பதிவு செய்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், நீங்கள் மலையாள படங்களை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 100 கோடி 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது .

மலையாள படங்களின் சிறப்பம்சங்கள்:

அதுதான் வியாபாரம். அவர்கள் மலையாள நடிகைகளை மட்டுமே மலையாளம் பேசத் தெரிந்த நடிகைகளை மட்டுமே நடிக்கவைப்பார்.

படத்தையும் கதாபாத்திரங்களையும் மிகவும் நேச்சுரல் ஆக நடிக்க வைப்பார்கள். சிம்பிளாக படத்தை எடுப்பார்கள் அதை கதையோடு ஒன்றி பார்ப்பதற்கு உண்மையாக இருக்கும் .

அந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியும் பெரும். அவர்கள் தான் படம் எடுக்க தெரிந்தவர்கள். நம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தேவையில்லாத தண்ட செலவுகள் நிறைய செய்கிறார்கள் .

குறிப்பாக படத்தின் இயக்குனர்கள், நடிகர் , நடிகைகள்படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் இஷ்டத்துக்கும் படங்களை எடுக்க வேண்டும் என கூறுகிறார்கள் .

வெளிநாடுகளுக்கு சென்று பாடல் சூட்டிங் எடுக்கிறார்கள். பல கோடி அதற்கு செலவாகிறது. ஆனால் அந்த பாடல் திரையரங்கில் ஒலிக்கும் போது ரசிகர்களுக்கு பிடிக்காமல் எழுந்து வெளியே போய் தம்மடிக்க சென்று விடுகிறார்கள்.

அந்த பாடலை ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இப்படித்தான் தேவையில்லாத தண்ட செலவுகளை இழுத்து வந்து இயக்குனர்களும் படத்தின் நடிகர் நடிகைகளும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை இழுத்து மூடி விடுகிறார்கள் என ஏவிஎம் குமரன் அந்த பேட்டியில் பல ரகசிய விஷயங்களை குறித்து பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version