ரன் பட வாய்ப்பு இதனால தான் போச்சு.. வெளிப்படையாக கூறிய நடிகை சங்கீதா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், பின்னணி பாடகி ஆகவும், மாடல் அழகியாகவும் இருந்து வந்தவர் தான் சங்கீதா கிரிஷ்.

90ஸ் காலகட்டத்தில் திரைத்துறையில் நுழைந்து உயிர் ,பிதாமகன், தனம் போன்ற சிறப்பான திரைப்படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மக்களால் பிரபலமான நடிகையாக இடத்தை பிடித்தார்.

நடிகை சங்கீதா கிரிஷ்:

குறிப்பாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இவர் பிரபல பின்னணி பாடகியான கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் .

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் சங்கீதா சமீபத்தில் நடன மாஸ்டர் கலா உடன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என இவ்வளவு மொழிகளில் நீ நடிச்சிருக்க…. இதுல உனக்கு பிடிச்ச மொழி எந்த மொழியில் படம் பண்ணனும்னு ஆசைப்பட்டு போவ?

நிச்சயமா தமிழ் படமாக தான் இருக்கும் என்று கலாம் மாஸ்டர் கூறியவுடன் இல்ல தமிழ் இல்ல தமிழ் மொழியில் எனக்கு நடிக்கவே பிடிக்காது.

தமிழ் படங்களில் நடிக்கவே புடிக்கல:

எனக்கு தெலுங்கு திரைப்படம் தான் ரொம்ப பிடிக்கும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு தான் பிடிக்கும் இதை பார்த்து தமிழ் மக்கள் எவ்வளவு பேர் கோவப்பட்டாலும் எனக்கு பரவாயில்லை.

இங்க அவமரியாதை தான் நான் நிறைய சந்திச்சிருக்கேன். தெலுங்கு சினிமாவில் கொடுக்கும் மரியாதை இங்கு தமிழ் சினிமாவில் கொடுப்பதில்லை என்றார் நடிகை சங்கீதா

மேலும் நீங்கள் ஏதாவது மிகப்பெரிய வாய்ப்பு கைநழுவி போனதை நினைத்து பீல் பண்ணதுண்டா? என கலா மாஸ்டர் கேட்டதற்கு….

ஆம், எனக்கு ரன் பட வாய்ப்பு அப்படி போனது தான் ஒளிப்பதிவாளர் ஜீவா சார் ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்துட்டு அவருக்கு என்ன ரொம்ப பிடிச்சு போய் எனக்கு வாய்ப்பு தரேன்னு சொன்னாரு.

ரன் பட வாய்ப்பு இதனால தான் போச்சு:

என் நடனத்தை பார்த்து மாதவன் சார் கூட வந்து எனக்கு ஆபர்சுனிட்டி கொடுத்தாங்க. மாதவன் சாரும் ஜீவா சாரம் ரெண்டு பேருமே அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா என்ன பத்தி இயக்குனரிடம் எடுத்து சொல்லி இருக்காங்க.

ஆனால், என்னுடைய முந்தைய தோல்வி படங்களை எடுத்து பார்த்துவிட்டு இந்த படங்கள் எல்லாம் நீங்க நடிச்சு இருக்கீங்களா? என்று கேட்டார்கள்.

நான் ஆமாம் என்றதும்.. இந்த டைம்ல உங்கள நடிச்ச நடிக்க வச்சா எங்களோட படத்துக்கு வேல்யூ கம்மியாகும் எனக்கூறி அந்த படத்திலிருந்து என்னை நீக்கி விட்டார்கள். எனக்கு அந்த விஷயம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்றார் சங்கீதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version