எவ்ளோ காசு வந்தாலும் கூடவே கொடிய நோய்களையும் பெற்ற மூன்று நடிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களாக இருக்கும் மூன்று பேர் தங்களிடம் காசு, பணம் கோடிக்கணக்கில் இருந்தாலும் கூடவே நோயும் வந்து விட்டு அவதிப்படும் பிரபலங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் பகத் பாசில்:

கேரளாவில் பிறந்து வளர்ந்தவரான பகத் பாசில் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்து அங்கு தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்ததால் இவரது நடிப்பு பிரம்மிக்க செய்தது.

ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக இருந்த ஒரு பகத் பாஸில் ஹீரோ, வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம், சிறப்பு தோற்றம் இப்படி எது கொடுத்தாலும் அவர் அங்கு திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பி வந்தார் .

குறிப்பாக இவர் ஒரு தமிழ் விஜய் சேதுபதி போல மலையாளத்தில் என கூறப்பட்டு வந்தார். அந்த வகையில் பல மொழி திரைப்படங்களில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

மலையாளத்தை தாண்டி தமிழ் மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றி நடித்து அசத்தி வந்தார்.

அவரது நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. இவர் பிரபல நடிகையான நஸ்ரியா நசீம் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூரு நாட்கள் திரைப்படத்தில் நஸ்ரியாவுடன் சேர்ந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு பின்னர் குடும்பத்தாரின் சம்மதத்தின்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார்.

கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் பகத் பாசில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தாலும் கூட. அவர் வினோதமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

ஆம், (ADHD) எனப்படும் அதிக செயல்பாட்டுக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார் பகத் பாசில். இந்த நோய் வந்தவர்களின் மூளை ராக்கெட் வேகத்தில் பறக்கும்.

அவர்கள் எப்போதும் ஆக்டிவாக துறுதுறுவென இருப்பார்கள். சோர்வடைவே மாட்டார்கள். 24 மணி நேரமும் வேலை செய்ய சொன்னால் கூட துருதுருவாக மெஷின் போல் வேலை செய்வார்கள்.

நடிகை சமந்தா ரூத் பிரபு:

சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணான சமந்தா ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு திரைப்பட நடிகையானார்.

தமிழ் , தெலுங்கில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகை சமந்தா ருத் பிரபு .

தமிழ் தெலுங்கில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டி தக்க வைத்துக் கொண்டதோடு அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய சினிமா நடிகையாகவும் இடத்தைப் பிடித்தார் .

இவர் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நான்கு வருடத்திலேயே இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தை நோக்கி சென்றுவிட்டது.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா ஐட்டம் டான்ஸ், படுக்கை காட்சி, கவர்ச்சியான ரோல் என எல்லாவற்றிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

ஹிந்தியிலும். வருண் தவானுடன் சிட்டாடல் என்ற தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா கோடி கணக்கில் சம்பளம் வாங்கி நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்தாலும் கூட அவரும் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனை அடைந்த ஒரு சமயம் எல்லாம் இருந்தது .

ஆம் சமந்தா மயோசிட்டிஸ் என கூறப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தையே நோய் உருவாக்கும் நோய் இது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால் செயல் இழந்து போகும் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வந்தார். சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு சென்று தொடர் சிகிச்சை எடுத்து ஓய்வில் இருந்து பின்னர் தேறினார் சமந்தா.

தொகுப்பாளினி டிடி:

இந்த லிஸ்டில் அடுத்த நபராக இருப்பவர் தான் பிரபல தொகுப்பாளினியான டிடி. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

இதுவரை பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் , சூப்பர் சிங்கர் டி 20 , காபி வித் டிடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்டார்.

நட்சத்திர ஹீரோயின் அந்தஸ்துக்கு தொகுப்பாளியாகவே தனது பணியை சிறப்பாக செய்து வருவதன் மூலம் டிடிக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

ஒரு எபிசோடுக்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் டிடி திவ்யதர்ஷினி “Rheumatoid arthritis” என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பல மணிநேரம் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததால் டிடிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கால்களில் இருக்கக்கூடிய மூட்டுகள் தாக்கக்கூடிய ஒரு நோய். இதனால் நடக்கவே முடியாத நிலைக்கு படுக்கையில் இருப்பார்கள்.

ஆனால் டிடி இந்த நோயால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது உடலை தேற்றிக்கொண்டு. இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்து வருடங்களாக என்னால் ஓட கூட முடியவில்லை என டிடி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக பல கோடி மற்றும் லட்சத்தில் சம்பளம் வாங்கும் பிரபலங்களுக்கு நோய்வாய்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் இருப்பது நிதர்சனமான உண்மை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version