இந்த படத்தின் தழுவல் தான் துணிவு..? – இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகர் அஜித் மஞ்சுவாரியர் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய துணிவு திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு இதனை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் வாடகை வருவதாக தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மேலும் தற்போது இந்த படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் பொழுது ஹாலிவுட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “இன்சைட் மேன்” என்ற படத்தின் காப்பி என்று தோன்றுகிறது என சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

ஆனால் தற்பொழுது ஹாலிவுட் வரை இந்த படத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிய வந்திருக்கிறது. ஏன் என்றால் கோலிவுட்டில் வெளியான பல படங்களின் கதைகளை கோர்த்து தான் இந்த படம் உருவாகியுள்ளது என கூறுகிறார்கள்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில் மேன், சிவாஜி ஆகிய படங்களிலும் ஏற்கனவே நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வில்லன் திரைப்படத்தையும் நாணயம் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் கலவைதான் துணிவு என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே வலிமை திரைப்படத்தில் சிறு சறுக்கல் எதிர்கொண்ட இயக்குனர் ஹெச்.வினோத் தற்பொழுது இந்த கதையில் வெற்றி பெறுவாரா..? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த அத்தனை கதையும் வெறும் டிரைலரை மட்டுமே பார்த்து வெளியாகக் கூடிய கதைகள் முழு படம் வெளியான பிறகுதான் இந்த படம் புதிய கதையாக புதிய திரைக்கதை அல்லது ஏற்கனவே இருக்கும் பழைய கதையில் புதிய திரைக்கதை அமைத்து எடுத்து இருக்கிறார்களா..? என்ற விபரங்கள் தெரியவரும்.

சமீபகாலமாக வெளியாகக் கூடிய அனைத்து படங்களுமே அந்தப் படத்தின் தழுவல் இந்தப் படத்தின் காப்பி இந்த படத்தின் கலவையை என தகவல்களை வாடிக்கையாக நடந்து வருகிறது. இது குறித்து இயக்குனரிடம் கேட்டால் ஸ்வரங்கள் ஏழு வகை தான் என்று விதவிதமான கதைகளை பேசி  எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …