தல அஜித் துணிவு திரைப்படத்தை வெளியிடக்கூடிய வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியது லைக்கா நிறுவனம்…!!

எஸ் வினோத் இயக்கி இருக்கக்கூடிய துணிவு திரைப்படத்தில் தல அஜித் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.

வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் உள்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனத்தின் உரிமையாளர் உதய நதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார்.

 மேலும் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்தப் படமும், விஜய்யின் வாரிசு படமும் ஒரே பொங்கல் தினத்தில் வெளிவருவதால் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பும் மற்றும் கடும் போட்டோ போட்டி நிலவி வருகிறது.

 இந்த நிலையில் வெளிநாடுகளில் இந்த துணிவு படத்தை வெளியிடுவதற்கான உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. அது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக தற்போது ஒரு போஸ்டரை போட்டு தனது கெத்தை காட்டியுள்ளது லைக்கா நிறுவனம்.

 மேலும் அஜித்தின் துணிவு படத்துடன் இணைந்தது லைக்கா நிறுவனத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்திருப்பதாக அந்த நிறுவனம் கூறி இருப்பதோடு துணிவு படத்தை வெளிநாடுகளில் அதிகமான தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்திருப்பதால் திரையரங்குகளை புக் செய்யக்கூடிய வேலை தற்போதைய துவங்கப்பட்டு விட்டது என்ற செய்தியை கூறியுள்ளது.

மேலும் இந்த நிறுவனம்தான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62 ஆவது படத்தையும் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் லைக்கா நிறுவனத்தின் இந்த துரிதமான செயல்பாட்டை பாராட்டி வருவதுடன் விரைவில் தலயின் திரைப்படத்தை பொங்கல் அன்று கட்டாயம் பார்க்க தயாராகி விட்டார்கள்.

ஏற்கனவே அடுத்தடுத்து தோல்விகளை தந்திருக்கும் தளபதி விஜய்யின் வாரிசு படமும் பொங்கல் அன்று வெளியே வரக்கூடிய நிலையில்  தல அஜித்தின் துணிவு படமும் வர இருப்பதால் எப்படி இருக்கும் என்று தெரியாமல் ரசிகர்கள் இப்போதே  அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டியில்  களம் இறங்கி விட்டார்கள் என கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam