நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி இருக்கிறது.
ட்ரெய்லரில் தோன்றக்கூடிய நடிகர் அஜித்குமார் அவருடைய ஸ்டைல், பேசும் விதம், செய்யும் சேட்டைகள் எல்லாம் மங்காத்தா அஜித்-தை ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கின்றன.
இருந்தாலும் வழக்கமான அஜித்தாக இல்லாமல் சற்றே கலகலப்பான அஜித்தாக இந்த திரைப்பட ட்ரெய்லரில் அவரை பார்க்க முடிகிறது. இந்த டிரைலரை வைத்துப் பார்க்கும் பொழுது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மதிப்பை குறைப்பதற்காக திட்டமிட்டு அந்த நிறுவனத்தில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி அந்த நிறுவனத்தை ஒன்றும் இல்லாமல் செய்ய துடிக்கிறார் கதாநாயகன் என்பது போல தெரிகிறது.
ஊரில் எத்தனையோ பேங்க் இருக்கும் பொழுது இந்த பேங்க்கை ஏன் அவர் தேர்வு செய்தார்..? இதன் பின்னால் இருக்கும் காரணம் என்ன..? என்று படம் வெளியான பிறகுதான் தெரியும். ஆனால், கதை நடக்கக்கூடிய இடம் ஒரு வங்கி.. அதனை கையகப்படுத்தும் கொள்ளைக் கும்பலின் தலைவனாக நடிகர் அஜித் இருக்கிறார்.. இவருடைய கும்பலுக்குள்ளேயே அஜித்திற்கு எதிராக ஒருவரும் இருப்பார் போல தெரிகிறது.. மேலும், அஜித் ப்ளாஸ்பேக்கில் போலீஸ் அதிகாரியாகவும் இருக்கிறார் என்பது போல தெரிகிறது.
கிட்டத்தட்ட நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்த படமான பீஸ்ட் திரைப்படத்தின் வாடையை இந்த படத்தில் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது.
குறிப்பாக கொள்ளை நடக்கக்கூடிய வங்கி உண்மையான வங்கியாக இல்லை.. அது செட் போடப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது.. ஒரு குறிப்பிட்ட பகுதியையே பெரிய பெரிய கட்டடங்கள் இருப்பது போல செட் செய்திருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் விதமாக இருக்கிறது.
டிரைலரின் முதல் காட்சியே ஒரு வங்கியை காட்டுகிறார்கள். இது சென்னையில் இருக்கக்கூடிய வங்கி என தெரிகிறது. சென்னையில் இருக்கக்கூடிய ஒரு வங்கி அதன் முன்பு இருக்கும் சாலைகள் எப்படி இருக்கும். ஆனால், இங்கோ சாலைகள் பளபளவென செட் போடப்பட்டு இருக்கிறது.
பார்ப்பதற்கே படத்தோடு ஒட்ட முடியுமா..? என்ற கேள்வியை எழுப்பும் விதமாக இந்த செட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் மேக்கிங்கில் படக்குழு கவனம் செலுத்தவில்லை என்பது ட்ரெய்லரில் கண்கூடாக பார்க்க முடிகிறது.
ஆனால் முழு படத்தையும் பார்க்காமல் இப்போதே இதை கூறுவது பொருத்தமாக இருக்காது என்பது ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு விஷயம். டிரைலரை பொறுத்தமட்டில் படத்தின் மேக்கிங்கில் இன்னும் கூடவே கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
குறிப்பாக பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஷாப்பிங் மால் மிகவும் செயற்கைத் தனமாக இருந்தது. உண்மையான ஷாப்பிங் மால் எப்படி இருக்கும்.. அதன் வெளிப்புறத்தில் எப்படி இருக்கும்.. உள்ளே எத்தனை பேர் இருப்பார்கள்.. ஷாப்பிங் மாலுக்கு வெளியே எத்தனை பேர் இருப்பார்கள்.. போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும்.. ஆனால் பீஸ்ட் படத்தில் ஒரு ஷாப்பிங் மால்… உள்ளே ஒரு 50 பேர்.. வெளியே சில ட்ரோன் ஷாட்களை மட்டுமே வைத்து படத்தை வெளியிட்டிருந்தார்கள்.
இதனால் அந்த படத்தின் கதையோடு ஒன்றி ரசிகர்களால் பயணிக்க முடியவில்லை. அதே தவறை துணிவு திரைப்படத்திலும் செய்திருப்பார்களோ..? என்ற அச்சம் ஏற்படுகிறது.
காரணம்.., இந்த டிரைரில் வரக்கூடிய வங்கியை சுற்றி ஏசெயற்கைத்தனமான ஒரு சுற்றுச் சூழலை பார்க்க முடிகிறது.. இது ரசிகர்கள் படத்தோடு தங்களை இணைத்துக் கொள்வதற்கு தடையாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை..
எனினும் அஜித்தின் வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஆக்சன் காமெடி மற்றும் அரசியல் பகடி என ஹெச்.வினோத் திரைக்கதைக்கு எந்த பஞ்சமும் வைத்திருக்க மாட்டார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்த டிரைலர் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பையும் கொடுக்காமல்.. ஏமாற்றமும் இல்லாமல் ஒரு எவரேஜான ஒன்றாகவே இருக்கிறது. இந்த படத்தின் எதிர்பார்ப்பையும் இந்த ட்ரெய்லர் கூட்டி இருக்கிறது என்பதுதான் உண்மை.