” விடாத சளியை விரட்டி அடிக்கும் தூதுவளை ரசம்..!” – ஈஸியா இப்படி செய்தா ஒரு பருக்கை சாதமும் வேஸ்ட் ஆகாது..!

 மழைக்காலம் என்றாலும் கோடை காலம் என்றாலும் பருவ மாற்றத்தின் காரணமாக பலருக்கும் சளி பிடிக்கும். எத்தனை மருந்துகள் சாப்பிட்டாலும் எந்த சளி குறைவதற்கே சில நாட்கள் பிடிக்கும். அத்தகைய சளியை எந்த பருவ காலத்திலும் எளிதில் விரட்டி அடிக்க கூடிய தூதுவளை ரசத்தை நீங்கள் இப்படி செய்து சாப்பிடுவதின் மூலம் விரைவில் குணப்படுத்த முடியும்.

 தூதுவளை ரசம் செய்ய தேவையான பொருட்கள்

1.தூதுவளை இலை பத்து

2.மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்

3.சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன்

4.பூண்டு 10 பல்

5.வர மிளகாய் இரண்டு

6.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன் 7.பெருங்காயத்தூள் சிறிதளவு

8.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு

9.புளி  நெல்லிக்காய் அளவு

10.பருப்புத் தண்ணீர் இரண்டு கப்

11.தக்காளி ஒன்று

12.உப்பு தேவையான அளவு

13.மஞ்சள் பொடி தேவையான அளவு

செய்முறை

 முதலில் தூதுவளை இலையில் முட்கள் இருக்கும் அந்த முட்கள் போக இடிகல்லில் நன்கு அந்த இலையை இடித்துக் கழுவி கொள்ளுங்கள். பிறகு இந்த இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அதனோடு சீரகம், குறுமிளகு, பூண்டு கருவேப்பிலை போன்ற பொருட்களையும் போட்டு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 இதன்பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடாகிய பிறகு அதில் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்தவுடன் அதில் வரமிளகாயை சேர்த்துக் கொள்ளவும்.

 வரமிளகாயை சேர்த்த பின் எடுத்து வைத்திருக்கும் புளியை நீரில் கலந்து நன்கு கரைத்து புளி கரைசலை  ஊற்ற வேண்டும்.

 இப்போது அந்த புளி கரைசலுக்கு தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கொதிக்க விடவும். பின் ஒரு தக்காளியை பொடி பொடியாக நறுக்கி அதில் போட்டு விடவும்.

 இதனை அடுத்து எடுத்து வைத்திருக்கும் இரண்டு கப் அளவு பருப்பு தண்ணீரை அதில் சேர்க்க வேண்டும். மேலும் நீங்கள் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அந்த கலவையை கொட்டி நன்கு கிளறி விடவும்.

 இந்தக் கலவையானது ஐந்து நிமிடம் வெந்து அப்படியே நுரை கட்டும். அப்போது அடுப்பை ஆப் செய்து விடவும். மேலும் உப்பு தேவையானில் சுவைப்பார்த்து மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் இறக்குவதற்கு முன்பு ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் இவற்றை போட்டு விடுங்கள். இப்போது சுடச்சுட  மனத்தை கிளப்பும் தூதுவளை ரசம் தயார். இதை நீங்களும் உங்கள் குழந்தைகளும் சுவைத்துப் பார்த்தால் சுவை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …