டிக் டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமான இலக்கியா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இளம் ரசிகர்கள் அதிகளவு இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள்.
டிக் டாக் செயலியை தடை செய்ததை அடுத்து இன்ஸ்டாகிராம் Facebook பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கக் கூடிய இவர் அண்மையில் கதறி அழுது இருக்க கூடிய விஷயம் வெளிவந்துள்ளது.
டிக் டாக் இலக்கியா..
கவர்ச்சி வீடியோ போட்டு பிரபலமான இலக்கியா ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகளை தேடி அலைந்ததை அடுத்து பலரும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்ல சினிமாவே வேண்டாம் என்று மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு லைக்குகளை அள்ளி சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் you tube சேனல் ஒன்று பேட்டியளித்த போது தனியாக இருக்கும் தன்னை பார்க்க பல நண்பர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். கடந்த கால வாழ்க்கையை நினைத்து பக்குவப்பட்டு இருப்பதை அடுத்து எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய மனநிலையில் தான் இப்போது இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து அது தோல்வி ஆகிவிட்டதால் போதுமடா சாமி இருப்பதை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரே ஒரு படத்தில் மட்டும் நடனம் ஆடி இருப்பதாக சொன்னவர் புதிதாக குக்கிங் சேனல் ஒன்றை ஆரம்பித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
நான் மாற நினைச்சாலும் மாற விடமாட்டாங்க..
இந்த சேனலுக்கு மக்கள் இவ்வளவு ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் எட்டு வயதில் இருந்தே சமையல் செய்து வருகிறேன். சமையல் செய்வது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனவே இனிமேல் கவர்ச்சி காட்டாமல் இப்படியே மாறிவிடலாமா? என்று எண்ணி தான் தற்போது கவர்ச்சி வீடியோக்களை போடுவதில்லை. இதை அடுத்து பல ரசிகர்கள் தாறுமாறாக என்னிடம் கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். இதனால் நான் மனவேதனையோடு இருக்கிறேன்.
இந்த வேதனைக்கு காரணம் அப்படிப்பட்ட அந்த ரசிகர்கள் இனிமை காட்ட மாட்டியா? நீ என்ன பத்தினியா? சும்மா பத்தினி வேஷம் போடாதே என்பது போன்ற கமெண்ட்களை போட்டு என்னை நோகடிக்கிறார்கள்.
அது மட்டுமா? கவர்ச்சி வீடியோ போட்டாலும் திட்டி இருக்கிறார்கள். இது போல வாழ்க்கையில் மாறி இப்படி செய்யலாம் என்ற ஒரு மனநிலைக்கு வந்தால் அதையும் குறை சொல்லி வருகிறார்கள் என்று கதறி அழுது இருக்கிறார்.
மேலும் இன்று வரை அவர் காதல் கல்யாணம் போன்றவற்றில் எந்த ஒரு ஐடியாவும் இல்லை என்று சொன்ன இவர் முதல் காதல் பிரேக் அப் ஆனதும் அடுத்தவர் மீது இன்னும் நம்பிக்கை வரவில்லை.எனவே மீண்டும் என் வாழ்க்கையில் நல்ல மனிதர்களை சந்தித்தால் அவரை கல்யாணம் செய்து கொள்வேன் அப்போது அது பற்றி யோசிப்பேன் இல்லையென்றால் இப்படியே இருந்து விடுவேன் என பேசி இருக்கிறார்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது