” அழகிய அடர்த்தியான புருவம் வேண்டுமா..! ” – அப்ப இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

ஆண்களை விட பெண்கள் சரும பராமரிப்பு, முகப் பராமரிப்பில் அதிக அளவு அக்கறை காட்டி வருகிறார்கள். மேலும் இவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தேவை இல்லாத வேதியல் பொருட்கள் கலந்த அதிகமான அழகு சாதனங்களை எண்ணற்ற விலைகள் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அடர்த்தியான, அழகான புருவ முடியை எளிதில்  ஐந்து பைசா செலவில்லாமல் பெறவது எப்படி என்பதை இப்போது இந்த கட்டுரையில் நீங்கள் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

அடர்த்தியான புருவ முடி பெற சில டிப்ஸ்

உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன வெங்காயத்தை நான்கு எடுத்துக் கொண்டு அதை பொடி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரிலோ அல்லது அம்மியிலோ வைத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அரைத்த பின்பு இந்த வெங்காயத்தை ஒரு காட்டன் துணியில் வைத்து வெங்காயச் சாறை பிழிந்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாறை உங்கள் புருவங்களில் தடவி ஐந்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். இதன் பிறகு குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி விடலாம்.

வெங்காயச் சாறு  புருவங்களில் இருக்கும் கொலஜன் திசுக்களின் உற்பத்தியை தூண்டி விடுவதால் உருவங்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

 சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய்க்கு அதிக அளவு பங்கு இருப்பதால்தான் ஆரம்பகால முதல் இன்று வரை இது இதனை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த தேங்காய் எண்ணெயை லேசாக சூடு செய்து இரவு உறங்குவதற்கு முன்பு இளம் சூட்டில் உங்கள் புருவங்களில் தேய்த்து விட்டு உறங்கவும். நன்றாக மசாஜ் செய்து உறங்குவதின் மூலம் உங்கள் புருவ முடி நன்கு வளர்ச்சி அடையும்.

இதனை இரண்டு வாரங்கள் தொடர்ந்து இதை செய்வதின் மூலம் உங்கள் புருவங்கள் வளர்ந்து இருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மேற்குரிய எந்த இரண்டு டிப்ஸையும் நீங்கள் ஃபாலோ செய்து வந்தால் கட்டாயம் அழகான அடர்த்தியான புருவத்தை நீங்கள் ஐந்து பைசா செலவில்லாமல் பெற முடியும்.

 மேலும் உங்கள் புருவங்களை பார்த்து அனைவரும்  இதுபோல புருவம் தங்களுக்கு இல்லையே எப்படி இப்படி ஆனது என்பதை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …