“சாப்பாடு சாப்பிடுவதில் எத்தனை வழிமுறைகளா..!” – ஃபாலோ பண்ணா ஹெல்தியான லைஃப் மச்சி..!

நாகரிகமான காலத்தில் இன்று உணவருந்துவதை டைனிங் டேபிளில் அமர்ந்து அருந்து வேண்டும் என்றபடி தான் அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதின் மூலம் நம் உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆற்றல் முழுமையாக கிடைக்காது. எனவே  பாரம்பரிய முறைப்படி சமணங்கால் போட்டு நாம் சாப்பாடு சாப்பிடுவதின் மூலம் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

மேலும் நாம் உண்ணும் போது சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நமக்கு எண்ணற்ற ஆரோக்கியங்கள் கிடைக்கிறது. அவை என்னென்ன எப்படி சாப்பாட்டினை நாம் உண்ண வேண்டும் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகள்

நீங்கள் உணவினை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் கைகளை சுத்தமாக கழுவி விட்டு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட நீங்கள் இடது கையை எப்போதும் பயன்படுத்தக்கூடாது. வலது கையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அதிகாலை உணவு உட்கொள்வது ஆரோக்கியமானது.

உணவினை சமணம் கால் போட்டு சாப்பிடும் போது தரையில் சிந்தாமல் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.உங்கள் கைகளால் நீங்கள் பிசைந்து சாப்பிடும் போது பல வழிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

அது கோபமாக நீங்கள் சாப்பிடக்கூடாது. உணவினை ருசித்து ரசித்து சாப்பிட வேண்டும். அவசர அவசரமாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் சாப்பிடும் போது தலையில் எண்ணெய் வைத்திருக்கக் கூடாது. குளிப்பதற்காக தலையில் எண்ணெய் தேய்த்த சமயத்தில் நீங்கள் சாப்பாட்டை தொடவே கூடாது.

நீங்கள் சாப்பிடும் போது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அந்த விளக்கை குளிர்விக்கக்கூடாது. சாப்பிட்டு முடித்த பிறகு தான் பூஜை அறையில் எரியும் விளக்கை நீங்கள் குளிர்விக்க வேண்டும்.

மேற்கூறிய வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து தான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். எனவே அந்த வழிமுறைகள் உங்களுக்கு இதுவரை தெரியாமல் இருந்தாலும் இப்போது இதை படித்து தெரிந்து கொண்டீர்கள் அல்லவா அதை ஃபாலோ செய்வதின் மூலம் உங்களது ஆரோக்கியமும் மேம்படும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …