“நோ வெங்காயம்.. நோ தக்காளி..!” – உங்க கிரேவி திக்கா இருக்க சில டிப்ஸ்..!

அன்றாட உணவுப் பொருட்களை நாம் வீடுகளில் தயார் செய்யும் போது அதில் வெங்காயத்தையும் தக்காளியும் போட்டு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இதற்கு மாற்றாக வேறு எந்த பொருட்களை பயன்படுத்தினால் நீங்கள் வைக்கக்கூடிய கிரேவி திக்காக வரும் என்பதை பற்றிய சில முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்யும் கிரேவி திக்காக சில டிப்ஸ்

டிப்ஸ் ஒன்று

உங்கள் வீட்டில் எப்போதும் கோதுமை மாவு இருக்கும். இந்த கோதுமை மாவை லேசாக வறுத்து பிறகு நீங்கள் அதை உங்கள் கிரேவியில் சேர்ப்பதின் மூலம் உங்கள் கிரேவி மிகவும் திக்காக இருக்கும்.

டிப்ஸ் இரண்டு

அதுபோலவே சில வீடுகளில் மரவள்ளிக்கிழங்கை மாவாக்கி வைத்திருப்பார்கள். எந்த மாவையும் உங்கள் கிரேவிக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் கிரேவி திக்காக இருக்கும்.இதற்கு வெங்காயம், தக்காளியின் பயன்பாடு இதற்கு தேவையே இல்லை.

டிப்ஸ் மூன்று

வேகவைத்த உருளைக்கிழங்கை நீங்கள் நன்கு மசித்து அதை உங்கள் கிரேவியோடு கலக்கும் போது கிரேவி திக்காக மாறிவிடும்.சுவையும் மணமும் கூடும்.

டிப்ஸ் நான்கு

இரண்டு டீஸ்பூன் அளவு தண்ணீரில் அரிசி மாவை கலந்து இந்த கலவையை உங்கள் கிரேவியில் கலப்பதின் மூலம் கிரேவி திக்காக மாறி விடுவதோடு சுவையும் கூடுதலாக இருக்கும்.

டிப்ஸ் ஐந்து

நீங்கள் செய்திருக்கும் கிரேவியோடு மக்காச்சோளம் மாவை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு தண்ணீரில் நன்கு கலந்து விடுவதின் மூலம் கிரேவி வெங்காயம், தக்காளி சேர்க்காமலேயே திக்காக கிடைக்கும்.

மேற்கூறிய இந்த ஐந்து டிப்ஸை ஃபாலோ செய்து நீங்கள் கிரேவியை வெங்காயம், தக்காளி இல்லாமல் வைத்து உங்கள் கிரேவிக்கு திக்னஸ் தரக்கூடிய இந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும். இதன் மூலம் உங்கள் கிரேவி வித்தியாசமான சுவையோடு மணத்தோடும் இருக்கும். எல்லோரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

 நீங்களும் ஒருமுறை இதை பயன்படுத்திப் பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …