“உங்கள் வீட்டுல் தோட்டத்தை அமைக்க எளிய டிப்ஸ்..! – யூஸ் பண்ணுங்க..!

இன்று அனைவருமே அவர்கள் வீட்டில் ஒரு சின்ன தோட்டத்தை அமைத்து அதில் காய்கறிகள், செடி, கொடிகள், பூ வகைகள் போன்றவற்றை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.

 மேலும் இவர்கள் இவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் உடல் ஆரோக்கியம் ஏற்படும். மன அழுத்தம் குறையும். வீட்டுக்கு தேவையான காய்கறிகளை ஆர்கானிக் காய்கறிகளாக நாம் நம்முடைய உழைப்பின் மூலம் பெற முடியும்.

அப்படிப்பட்ட வீட்டு தோட்டத்தை நீங்கள் அமைக்கும் போது அதை நீங்கள் சரியாக பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை பற்றி சில டிப்ஸ்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வீட்டு தோட்டத்தை அமைக்க சில டிப்ஸ்

முதலில் வீட்டு தோட்டத்தை அமைக்க நீங்கள் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடம் சூரிய ஒளி படும்படி இருத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

மேலும் உங்கள் வீட்டு தோட்டத்தில் நீங்கள் பூ செடிகள் மட்டுமல்லாமல் காய்கறிகள், ஏன் மூலிகை செடிகளையும் நீங்கள் பயிரிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்கள் தோட்டத்திற்கு போதுமான தண்ணீர் வசதி இருக்க வேண்டும். எனவே நீங்கள் பயிர் செய்கின்ற தாவரங்களுக்கு நீர் பாசன அமைப்பு சரியான விதத்தில் அமையக்கூடிய இடத்தை தேர்வு செய்யுங்கள். அதாவது நீங்கள் வைத்திருக்கும் செடிகள் உங்கள் தண்ணீர் குழாய்களின் அருகில் இருந்து சற்று தூரத்தில் இருக்கட்டும்.

மேலும் நீங்கள் உங்கள் வீட்டு மண்ணில் நடக்கும் கூடிய செடிகள், தொட்டியில் வளர்க்க கூடிய செடிகள், படர்க்கூடிய செடிகள் போன்றவற்றை தனித்தனியாக தரம் பிரித்து அதற்கென தனியாக இடங்களை ஒதுக்கி வளர்ப்பது மிகவும் சிறந்தது.

மண்ணுக்கு போதிய அளவு ஊட்டச்சத்தை கொடுக்க உங்கள் வீட்டில் சமையல் அறையில் இருந்து வெளிவரும் காய்கறி கழிவுகளை அந்த மண்ணில் போட்டு சத்தாக மாற்றலாம்.

மேலும் நீங்கள் இருக்கின்ற இடத்திற்கு ஏற்றவாறு தாவரங்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

தோட்டத்தை அமைத்தால் மட்டும் போதாது. அதை சரியான வடிவத்தில் நீங்கள் பராமரிப்பதும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். செடிகளுக்கு நோய் ஏற்பட்டால் அதை சரி செய்ய சரியான பூச்சி கொல்லிகளையோ அல்லது வீட்டில் தயாரிக்கின்ற இயற்கை பூச்சி கொல்லியை நீங்கள் செய்து பயன்படுத்தலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …