“வீட்டு பராமரிப்பு-க்கு சூப்பரான சில டிப்ஸ்..!” – நீங்களும் இப்படி செய்யுங்க..!

வீட்டு பராமரிப்பு: வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவருமே வீட்டு பராமரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும் அதன் மூலம் மட்டும் தான் நம் வீட்டை அழகாகவும் அம்சமாகவும் வைத்துக் கொள்ள முடியும் ஒருவர் மட்டுமே அதில் ஈடுபடுவதன் மூலம் அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வீட்டை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல்களும் ஏற்படும்.

எனவே உங்கள் வீட்டை எளிதாக பராமரிக்க கூடிய சில குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

house Maintenance

உங்கள் வீட்டில் யுபிஎஸ் இருந்தால் இன்வெர்ட்டரை சார்ஜ் செய்யும் போது அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும் அதைவிட அதிகமான வேகத்தில் நீங்கள் சார்ஜ் செய்யும் போது இன்வெர்ட்டர் நீண்ட காலம் உழைக்காமல் சடுதியில் ரிப்பேர் ஆகிவிடும்.

பழைய பொருட்களை அதிகளவு வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள் முடிந்தவரை வேண்டாத பொருட்களை அவ்வப்போது வெளியேற்றி விடுவது நல்லது. இல்லையென்றால் அந்த பகுதிகளில் அதிக அளவு தூசி படிவதோடு பள்ளிகள் மற்றும் சிறிய சிறிய பூச்சிகள் அதிகரிப்பதற்கு வழிவகை செய்து விடும்.

house Maintenance

வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் மெத்தைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கீழே உள்ள பகுதியை மேலே திருப்பிப் போட வேண்டும் அப்போதுதான் பஞ்சு சீரான முறையில் பரவி முதுகு வலியை ஏற்படுத்தாமல் தடுக்கும்.

வாரம் ஒரு முறை நீங்கள் மெத்தை விரிப்புகள் தலையணைகள் ஆகியவற்றை துவைத்து போடுவதோடு மட்டுமல்லாமல் தலையணைகளை சிறிது நேரம் வெயிலில் அப்படியே வைத்துவிட்டு இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு எடுப்பதால் அதில் ஏதேனும் நுண்ணுயிரிகள் இருந்தால் வெப்பத்தால் அது இறந்து விடும்.

house Maintenance

வீட்டில் தரையை சுத்தப்படுத்தும் போதே நீங்கள் கதவுகள் மற்றும் வாசல் கால் பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் நல்லது மேலும் இந்தப் பகுதிகளுக்கு வார்னிஷ் அடித்து விடுவதால் நீரினால் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்த்து விடலாம்.

எனவே மேற்கூறி இருக்கும் டிப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தி உங்கள் வீட்டை மிக  நேர்த்தியாக பராமரித்து அனைவரது முன்பும் பாராட்டுகளை எளிதில் அள்ளி எடுத்து விடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …