வீட்டுப் பொருட்களை எளிதில் பராமரிப்பு செய்ய உதவும் குறிப்புகள்..!

வீட்டில் உள்ள பொருட்களை எளிதாக பராமரிப்பு செய்வதின் மூலம் அந்த பொருட்கள் நீண்ட நாட்கள் நமக்கு உழைக்கும். அந்த வரிசையில் நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை எளிதாக எப்படி பராமரிக்கலாம் என்பது பற்றிய சில குறிப்புகளை எந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு ஒன்று

வீட்டில் உங்கள் பூட்ஸ் பாலிஷ் போடும்போது சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பாலிஷ் போட்டால் பூட்ஸ் பள பளவென மாறிவிடும். மேலும் பூஞ்சைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பூட்ஸ்களுக்கு ஏற்படாது.

குறிப்பு இரண்டு

உங்கள் சட்டைகள் அல்லது துணிகளில் ஏதேனும் இரும்புத்துரு கரை படிந்து விட்டால் அதனை நீக்க எலுமிச்சை சாறு உப்பு இரண்டையும் கலந்து கறை படிந்த இடத்தில் நன்கு தேய்த்து அலசுவதின் மூலம் அந்த கரை இருந்த இடம் தெரியாமல் போகும்.

குறிப்பு மூன்று

சாயம் போகக்கூடிய துணிகளை துவைக்கும் போது சிறிதளவு அந்த துணியில் கடுக்காயை ஊற வைத்து துவைத்தால் துணிகளில் இருக்கும் சாயம் போகாது.

குறிப்பு நான்கு

வீடுகளில் எங்கு பார்த்தாலும் எறும்புகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தால் ஒரு பக்கத்தில் நீர் எடுத்து அதோடு சிறிதளவு மண்ணெண்ணெய் சேர்த்து வீட்டை துடைத்து விடுங்கள் எறும்புகளும் மற்ற கிருமிகளும் ஓடிவிடும்.

குறிப்பு ஐந்து

ஒயிட் வினிகர் உடன் சிறிதளவு நீரை கலந்து நீங்கள் பாத்ரூம் டைல்ஸ்சில் தெளித்து கழுவி விட்டால் டைல்ஸ் படிந்திருக்கும் கரைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

குறிப்பு ஆறு

வீட்டில் பாத்திரம் கழுவும் லிங்க் அடைத்துக் கொண்டால் கவலைப்படாதீர்கள். சோடா மாவு மற்றும் வினிகரை கலந்து ஊற்றுங்கள். ஒரு மணி நேரத்துக்கு பிறகு இதில் நீங்கள் சுடுநீரை ஊற்றி விட்டால் அடைப்பு அப்படியே ஓடிவிடும்.

குறிப்பு ஏழு

வெள்ளை வினிகரை சிறிதளவு நீரில் கலந்து தரையை துடைப்பதின் மூலம் தரையில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து தரை பளபளப்பாக காட்சியளிக்கும்.

குறிப்பு எட்டு

வீட்டில் வைத்திருக்கும் அலங்கார பொருட்கள் பூ சென்டு எவ்வளவு துடைத்தாலும் பளிச்சென்று மாறாது. இதற்கு ஹேர் டிரையரை கொண்டு நீங்கள் கிளீன் செய்தால் நொடியில் பளிச்சென்று மாறிவிடும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …