“பயணத்தின் போது வாந்தி-யை தவிர்க்க எளிய வழி..!” – இந்த டிப்ஸ் நீங்க ஃபலோ பண்ணுங்க பாஸ்..!!

புது, புது இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டு பல புதிய அனுபவத்தை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு புது இடங்களுக்கு பயணம் செய்யும்போது வாந்தி ஏற்படும். இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திண்டாடுவதும்  அதற்காக மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளவும்  செய்வார்கள்.

  அதிலும் மலை பிரதேசங்களுக்கு பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். தொடர் வாந்தி மயக்கம் என பல இன்னல்களுக்கு ஆளாகும் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.இதனை தான் மோஷன் சிக்னஸ் என்று கூறுவார்கள்.

 இந்த மோஷன் சிக்னஸில் இருந்து எளிதாக விடுபட சில டிப்ஸ் உள்ளது. இந்த டிப்ஸை நீங்கள் பயன்படுத்தி வந்தால் கட்டாயம் நீங்கள் டிராவல் செய்யும் போது உங்களுக்கு வாந்தி மயக்கம், உடல் சோர்வு ஏற்படாது.

டிப்ஸ் 1

 நீங்கள் பயணத்தை மேற்கொள்ளும் போது உணவை அருந்தாமல் சென்றால் வாந்தி வராது என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது தவறு மிதமான உணவுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு பயணத்தை மேற்கொள்வதின் மூலம் வாந்தி வரக்கூடிய உணர்வு உங்களுக்கு ஏற்படாது.

டிப்ஸ் 2

 பயணங்களில் போது நீங்கள் புத்தகங்கள் படிப்பதை தவிர்த்து விடுதல் நல்லது. ஏனெனில் சில சமயம் எந்த புத்தகங்கள் படிப்பதின் மூலம் உங்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அதை தவிர்த்து விடவும்.

டிப்ஸ் 3

 இந்த மோஷன் சிக்னஸ் ப்ராப்ளம் இருப்பவர்கள் வண்டியின் பின்பகுதியில் அமர்வதை தவிர்த்துவிட்டு நடுப்பகுதியில் அமர முயற்சி செய்யுங்கள். வயிறு  நிறைய சாப்பிடாமல் பயணத்தை மேற்கொள்ளுங்கள். வாந்தி வருவதை தடுப்பதற்கு எலுமிச்சம் பழத்தை நீங்கள் கையில் வைத்து முகர்ந்து பார்த்து பயன்படுத்தலாம்.

டிப்ஸ் 4

 மேலும் பயணத்தின் போது எலுமிச்சம் பழச்சாறில் சிறிதளவு உப்பு போட்டு அதனோடு மிளகுத்தூளும் கலந்து குடித்தால் உங்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படாது. அதுபோல புதினா இலை சாறுகளை எடுத்து எந்த ஜூஸில் கலந்து குடித்தாலும் உங்களுக்கு வாந்தி ஏற்படக்கூடிய உணர்வு வராது.

டிப்ஸ் 5

 பயணத்தின் போது வாந்தி ஏற்படுபவர்கள் சிறிதளவு சர்க்கரை அல்லது கருப்பு உப்போடு கிராமினை வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு உள்ளுக்குள் எடுத்துக்கொண்டால் வாந்தி பிரச்சனையில் இருந்து நீங்கள் விடுதலை அடைய முடியும். அதுபோல மலை நெல்லி அல்லது அரு நெல்லியை நீங்கள் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் வாந்தி பிரச்சனை பயணத்தில் உங்களுக்கு ஏற்படாது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …