வெற்றி அடைய உதவும் இலக்குகள்

30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு கடையை நிறுவும் நிறுவனம் அந்தக் கடையை நிர்வகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும். கிளைகளை தொடங்குவது பற்றியோ, வர்த்தகத்தை விரிவு படுத்துவது பற்றியோ யோசிக்காது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இல்லாததும் ஒரு காரணமாகும்.  தற்போது நிலைமை மாறிவிட்டது.

ஒருவர் எத்தனை கிளை கடைகளை  எங்கு வேண்டுமானாலும் துவங்கலாம். அது உள் நாடு என்றாலும் சரி வெளிநாடு என்றாலும் சரி அவர்கள் நிர்வாக திறன் சரியாக இருக்கும் பட்சத்தில் பல கிளைகளை நிறுவி அவர்கள் வெற்றிப்பாதையில் நடை யிடலாம்.

உங்களின் சிந்தனை உங்களின் எண்ணம் எல்லாம் உங்கள் தொழிலில் நீங்கள்  வளர்ச்சி அடைய என்னென்ன வழிகள் உள்ளது அந்த வளர்ச்சியை நோக்கி நீங்கள் எப்படி பயணிக்க வேண்டும் அந்தப் பயணத்தில் ஏற்படும் தடைகளை எப்படி தகர்க்க வேண்டும் உங்களுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அதில் தீர்த்தமாக இருந்தால் நீங்கள் நிச்சயமாக வெற்றியாளராக இந்த உலகத்தில் போற்றப்படுகிறார்கள்.

செயல்திறனை மேம்படுத்துங்கள்:

உங்களது தன்னம்பிக்கை மட்டும் வெற்றியடைய போதாது. நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க உங்கள் செயல்திறனை கூட்ட வேண்டும். செயல்திறனைக் கூட்டுவதற்கும் முன்பு தினமும் எதை எப்படி செய்ய வேண்டும் எனும் ஒரு திட்டத்தை நீங்கள் உங்களுக்குள் வகுத்துக்கொண்டு அதன்படி நீங்கள் செயல்படுத்தினால் மட்டுமே நீங்கள் உங்கள் பாதையில் வெற்றி இலக்கை அடைய முடியும். தேர்வு எழுதுவதற்கு எப்படி தேர்வு அட்டவணை முக்கியமோ அது போல தான் உங்கள் வெற்றியை நிர்ணயிக்க செயல்திறனை கூட நீங்கள் செய்யவேண்டிய செயல்திறனை அட்டவணைப்படுத்தி அதை பின்பற்றி தினமும் உழைக்கும் போது மட்டுமே நீங்கள் எளிதில் அந்த வெற்றி இலக்கை அடைய முடியும். திட்டமிடுதல் இதற்கு மிகவும் முக்கியமான ஒன்று திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி உங்கள் செயல்திறனை நோக்கிப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …