” இளம் வயதிலேயே சருமச் சுருக்கம் விழுகிறதா..!” – இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

இளம் வயதில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக விரைவாகவே சருமங்களில் இப்போது சுருக்கங்கள் விழுகிறது இதற்கு காரணம் அதிகமான வேலை பளு மற்றும் மன அழுத்தம் ஆகும்.

இவர்கள் இயற்கையான முறையில் கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய டிப்ஸை ஃபாலோ செய்வதின் மூலம் நிச்சயமாக உங்கள் சருமச் சுருக்கங்களை விரைவாகவும் எளிதாகவும் சரி செய்ய முடியும்.

சருமச் சுருக்கங்களை நீக்கும் டிப்ஸ்

 வறண்ட சருமத்தைக் கொண்டிருப்பவர்கள் தேனோடு ரோஸ் வாட்டர் ஐ கலந்து அதனை உங்கள் சருமங்களில் தேய்த்து வரும் போது உங்கள் சருமங்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி இளமையாக காட்சியளிப்பீர்கள்.

 நார்மல் ஸ்கின்னோடு இருப்பவர்கள்  ரோஸ் வாட்டரோடு இரண்டு துளி லாவண்டர் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து இந்த கலவையை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

 அதன் பின் இதனை எடுத்து உங்கள் சருமங்களில் பூசி விட்டு அது உலர்ந்த பிறகு கழுவி விடுங்கள். இப்படி செய்வதின் மூலம் உங்கள் சருமச் சுருக்கங்கள் எளிதில் நீங்கும்.

 மேலும் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நீக்குவதில் முட்டையின் வெள்ளைச்கருவுக்கு பெரும் பங்கு உள்ளது. முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் எதுவும் சேர்க்காமல் நன்கு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

 இவை குளிர்ந்த பிறகு உங்கள் சருமங்களில் தேய்த்து விட்டால் கட்டாயம் உங்கள் சருமங்களில் சுருக்கம் ஏற்படாது.

 ஒரு டேபிள் ஸ்பூன் தேனோடு வெண்மையாக இருக்கும் களிமண் துகளை சேர்த்து பசை போல் மாற்றி அதை உங்கள் முகம் மற்றும் கை கால்களில் தடவி உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழிவி விடுவதால் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் நீங்குவதோடு உங்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களும் நீங்கும்.

தேன்மெழுகு கோடு சிறிதளவு தேனை சேர்த்து நன்கு கலந்து அதை உங்கள் மேனியில் பூசுவதின் மூலம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் சரும சுருக்கத்தை நீக்கிவிடலாம்.

மேற்கூறிய இந்த டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்களுக்கு ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் தெரியும். எனவே மறவாமல் இந்த டிப்சை ஃபாலோ செய்து உங்கள் சருமச் சுருக்கங்களை போக்கி விடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …